IPL 2023 : சிஎஸ்கே எவ்ளவோ பரவால்ல – ஐபிஎல் வரலாற்றில் மும்பை படைத்த மோசமான சாதனையை 2 மணி நேரத்தில் சமன் செய்த பஞ்சாப்

- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் மே 3ஆம் தேதி மொகாலியில் நடைபெற்ற 45வது லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் 9 (7) கேப்டன் ஷிகர் தவான் 30 (20) என ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் குறைவான ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த மேத்யூ சார்ட் 27 (26) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் 12வது ஓவரில் ஜோடி சேர்ந்து மும்பை பவுலர்களை கடைசி வரை அவுட்டாகாமல் சரமாரியாக அடித்து நொறுக்கிய லியம் லிவிங்ஸ்டன் 7 பவுண்டரி 4 சிக்சருடன் 82* (42) ரன்கள் விளாசினார்.

அவருடன் 4வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ஜிதேஷ் சர்மா தனது பங்கிற்கு 5 பவுண்டரி 2 சிக்சருடன் 49* (27) ரன்கள் விளாசி நல்ல பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் பஞ்சாப் 214/3 ரன்கள் குவித்தது. மும்பை சார்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா 2 விக்கெட்களை எடுத்தார். மேலும் 214/8, 201/10, 201/6 என கடைசியாக களமிறங்கிய 3 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை அடித்திருந்த பஞ்சாப் இந்த போட்டியையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் 4 தொடர்ச்சியான போட்டிகளில் 200+ ரன்களை அடித்த முதல் அணி என்ற சாதனை படைத்தது.

- Advertisement -

மோசமான சாதனை:
மறுபுறம் அதற்கு அப்படியே நேர்மாறாக இதே பஞ்சாப்புக்கு எதிராக இந்த சீசனில் நடைபெற்ற முந்தைய போட்டியில் 214/8 ரன்களை பந்து வீச்சில் கொடுத்த மும்பை குஜராத்துக்கு எதிரான அடுத்த போட்டியில் 207/6 ரன்களும் ராஜஸ்தானுக்கு எதிரான அதற்கடுத்த போட்டியில் 212/7 ரன்களும் கொடுத்த நிலையில் மீண்டும் இப்போட்டியில் வள்ளலாக 214/3 ரன்களை வாரி வழங்கியது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 4 போட்டிகளில் பந்து வீச்சில் 200க்கும் மேற்பட்ட ரன்களை வழங்கிய முதல் அணி என்ற மோசமான வரலாற்றுச் சாதனையை மும்பை படைத்துள்ளது.

குறிப்பாக இதே சீசனில் துஷார் தேஷ்பாண்டே போன்ற பவுலர்களால் டெத் ஓவர்களில் சுமாராக செயல்பட்டு சில வெற்றிகளை தாரை வார்த்த எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை தான் மோசமான பந்து வீச்சை கொண்டிருப்பதாக நிறைய ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையாகவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை தான் பந்து வீச்சில் ரன் மெசினாக 4 தொடர் போட்டிகளில் 200+ ரன்களை கொடுத்து இந்த பரிதாப சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

ஒரு காலத்தில் ட்ரெண்ட் போல்ட், பொல்லார்ட், பாண்டியா சகோதரர்களால் பந்து வீச்சில் துல்லியமாக செயல்பட்ட மும்பை தற்போது இப்படி ரன் மெஷினாக செயல்பட்டு வருவது அந்த அணி ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. குறிப்பாக பும்ரா இல்லாத நிலையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய ஜோப்ரா ஆர்ச்சர், அர்சத் கான் போன்றவர்கள் ரன்களை வாரி வழங்குவதே அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் முந்தைய போட்டியை போலவே பந்து வீச்சில் வாரி வழங்கிய ரன்களை பேட்டிங்கில் பதிலுக்கு அடித்த மும்பை தங்களுடைய 5வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. குறிப்பாக ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே டக் அவுட்டானாலும் கேமரூன் கிரீன் 23 (18) ரன்கள் விளாசி சரிவை சரி செய்தார். அதை பயன்படுத்தி 3வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த இசான் கிசான் 7 பவுண்டரி 4 சிக்சருடன் 75 (51) ரன்களும் சூர்யகுமார் யாதவ் 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் (31) ரன்களும் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.

- Advertisement -

இறுதியில் திலக் வர்மா 26* (10) ரன்களும் டிம் டேவிட் 19* (10) ரன்களும் எடுத்து 18.5 ஓவரிலேயே மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். இதில் பரிதாபம் என்னவெனில் இதே சீசனில் மும்பைக்கு எதிரான முந்தைய போட்டியில் 214/8 ரன்களை வழங்கிய பஞ்சாப் லக்னோவுக்கு எதிரான அடுத்த போட்டியில் 257/5 ரன்களும் சென்னைக்கு எதிரான அதற்கடுத்த போட்டியில் 200/4 ரன்களையும் பந்து வீச்சில் கொடுத்த நிலையில் இப்போட்டியில் மீண்டும் 216/4 ரன்களை வழங்கியது.

இதையும் படிங்க:MI vs PBKS : தனது 200 ஆவது ஐ.பி.எல் போட்டியில் மோசமான சாதனையை நிகழ்த்திய ரோஹித் சர்மா – விவரம் இதோ

அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் 4 தொடர்ச்சியான போட்டிகளில் 200+ ரன்களை வழங்கிய 2வது அணியாக மும்பையை தொடர்ந்து பஞ்சாப்பும் அதே சாதனையை சமன் செய்தது.

Advertisement