MI vs PBKS : தனது 200 ஆவது ஐ.பி.எல் போட்டியில் மோசமான சாதனையை நிகழ்த்திய ரோஹித் சர்மா – விவரம் இதோ

Rohit Sharma
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46-வது லீக் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

MI vs PBKS

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக லியாம் லிவிங்ஸ்டன் 82 ரன்களும், ஜிதேஷ் ஷர்மா 49 ரன்களையும் குவித்தனர். அதனை தொடர்ந்து மும்பை அணிக்கு 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 200-வது ஐ.பி.எல் போட்டியாக அமைந்தது. கடந்து 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ரோகித் சர்மா ஆரம்பத்தில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிருந்தாலும் மும்பை அணிக்காக விளையாட ஆரம்பித்ததிலிருந்து அவரின் கரியர் உச்சத்தை தொட்டது.

Rohit 1

அதேபோன்று மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்த சாம்பியன் கேப்டனாகவும் முத்திரை பதித்துள்ளார். இந்நிலையில் தனது 200-வது போட்டியில் இன்று விளையாடிய ரோகித் சர்மா இந்த போட்டியின் முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே இறங்கி வந்து அடிக்க நினைத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதுவும் டக்அவுட் ஆகி வெளியேறினார். இப்படி 200-வது போட்டியில் டக்அவுட் ஆன ரோகித் ஐபிஎல் தொடரில் 15-வது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார். அதோடு தினேஷ் கார்த்திக், சுனில் நரேன், மந்தீப் சிங் ஆகியோருடன் சேர்ந்து அதிக முறை டக் ஆனவர்கள் பட்டியலிலும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : PBKS vs MI : பஞ்சாப்பை சொந்த ஊரில் பதிலுக்கு தெறிக்க விட்ட மும்பை – மொஹாலியில் வரலாற்று சாதனை வெற்றி பெற்றது எப்படி

அதோடு இந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 184 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் அவரது பேட்டிங் பார்ம் மோசமாக இருக்கும் வேளையில் ஐ.பி.எல் தொடர் முடிவடைந்த பின்னர் ரோஹித் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement