MI vs LSG : வருஷ வருஷமா நாங்க இதைத்தானே செய்ஞ்சிட்டு வரோம். இப்போ மட்டும் விட்ருவோமா – கெத்தாக பேசிய ரோஹித் சர்மா

Rohit Sharma
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி கட்டப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், க்ருனால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின.

MI vs LSG

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் குஜராத் அணியுடன் மோதும் என்பதனால் இந்த போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் இருந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் தங்களது அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

Akash Madhwal

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : நாங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே இதைத்தான் செய்து வருகிறோம். இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்பது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். கடந்த ஆண்டு சப்போர்ட் பவுலராக இருந்த ஆகாஷ் மத்வாலிடம் இருந்த திறமைகளை அப்போதே நாங்கள் உற்று கவனித்து வந்தோம்.

- Advertisement -

இம்முறை ஆர்ச்சருக்கு காயம் ஏற்பட்டு வெளியேறியதால் அவருக்கு பதிலாக ஆகாஷ் மத்வாலை அணிக்குள் கொண்டு வந்தோம். அவரும் மிகச்சிறப்பாக பந்துவீசி அசத்தியுள்ளார். கடந்த பல ஆண்டுகளாகவே மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் பலவீரர்கள் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இளம் வீரர்களை நாங்கள் எப்பொழுதுமே அணியில் தக்க வைத்து வருகிறோம்.

இதையும் படிங்க : IPL 2023 : அந்த டீம்ல எனக்கு மரியாதை கிடைக்கல – தனது முன்னாள் ஐபிஎல் அணி மீது உத்தப்பா பரபரப்பு குற்றசாட்டு

அவர்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுத்தால் நிச்சயம் அவர்களிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிவரும் என்பது எங்களுக்கு தெரியும். அந்த வகையிலே நாங்கள் இளம் வீரர்களை தொடர்ச்சியாக ஆதரித்து வருகிறோம். மும்பை வான்கடே மைதானத்தை விட சென்னை மைதானம் சற்று வித்தியாசமான மைதானம். இந்த போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி என ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement