IPL 2023 : அந்த டீம்ல எனக்கு மரியாதை கிடைக்கல – தனது முன்னாள் ஐபிஎல் அணி மீது உத்தப்பா பரபரப்பு குற்றசாட்டு

Uthappa
- Advertisement -

இந்தியாவின் நம்பர் ஒன் விளையாட்டு தொடரான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிந்த பிளே ஆப் சுற்று நடைபெற்று வருகின்றன. அதில் சேப்பாக்கத்தின் நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை மே 28இல் நடைபெறும் மாபெரும் ஃபைனலுக்கு நேரடியாக வரலாற்றில் 10வது முறையாக தகுதி பெற்று அசத்தியது. மிகவும் விறுவிறுப்புடன் நடைபெற்ற அந்த போட்டியில் குஜராத்தை விட தோனிக்காக ஏராளமான ரசிகர்கள் வழக்கம் போல சென்னைக்கு ஆதரவு கொடுத்தனர்.

அதற்கு நிகராக சின்ன தல சுரேஷ் ரெய்னா, மேத்தியூ ஹைடன், சுப்பிரமணியம் பத்ரிநாத், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் உட்பட ஏராளமான முன்னாள் வீரர்களும் சென்னைக்கு ஆதரவு கொடுத்தனர். அந்த வரிசையில் சென்னைக்காக விளையாடிய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவும் நேரடியாக களத்திற்கு வந்து தனது மகனுடன் பாபா ஸ்டைலில் முத்திரையை காட்டி ஆதரவு கொடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டார். அதை பார்த்து சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்த நன்றி தெரிவித்தனர்.

- Advertisement -

மரியாதையும் விஸ்வாசமும்:
ஆனால் தனது கேரியரின் கடைசி காலகட்டத்தில் 2 வருடங்களில் வெறும் 16 போட்டியில் விளையாடிய சென்னைக்கு இவ்வளவு ஆதரவு கொடுக்கும் நீங்கள் 2014 – 2019 வரை நீண்ட காலம் விளையாடிய கொல்கத்தாவுக்கு இவ்வளவு ஆதரவு கொடுக்காதது ஏன்? என அந்த அணி ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு சற்று யோசிக்காத உத்தப்பா “விஸ்வாசம் மற்றும் மரியாதையை கொடுத்து வாங்க வேண்டும் நண்பா” என்று அந்த ரசிகருக்கு நெத்தியடி பதிலாக கொடுத்தார்.

அதாவது கொல்கத்தா அணியில் தமக்கு சரியாக கிடைக்காத மரியாதை சென்னை அணியில் கிடைத்ததாலேயே 2 வருடங்கள் விளையாடினாலும் விஸ்வாசத்துடன் அந்த அணிக்கு ஆதரவு கொடுப்பதாக அவர் சொல்லாமல் சொல்லினார். அதனால் கொந்தளித்த கொல்கத்தா ரசிகர்கள் 2014இல் ஆரஞ்சு தொப்பியை 2வது கோப்பையை நல்ல உதவியதை தவிர்த்து எஞ்சிய சீசன்களில் சுமாராக செயல்பட்டதை நினைத்துப் பாருங்கள் என்று உத்தப்பாவுக்கு பதிலடி கொடுத்தனர்.

- Advertisement -

இருப்பினும் அப்படி சொன்னதற்காக அந்த வெறுப்பான கருத்துக்கள் வருவதில் தமக்கு எந்த ஆச்சரியமும் இல்லை என்று மீண்டும் பதிலளித்த உத்தப்பா என்னுடைய அனுபவத்தை தான் பகிர்ந்துள்ளேன் என்றும் அனைவரும் அமைதியாகுங்கள் அனைவரையும் விரும்புகிறேன் என்று கூறினார். அதற்கு வெறுப்புகளை தவிர்த்து அன்பை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் பதிலளித்து ஆதரவு கொடுத்தார். அந்த நிலையில் அன்பு மட்டும் தான் வெறுப்பை வென்று வரும் என்று உத்தப்பா அவருக்கு பதிலளித்தார்.

இருப்பினும் கொல்கத்தா ரசிகர்கள் விடாமல் தொடர்ந்து திட்டி தீர்த்ததால் உண்மையாகவே அந்த அணிக்காக விளையாடிய போது என்ன நடந்தது என்பதை ராபின் உத்தப்பா மீண்டும் ட்விட்டரில் வெளிப்படையாக கூறியுள்ளார். குறிப்பாக கௌதம் கம்பீர் தலைமையில் விளையாடிய போது இருந்த சுதந்திரமும் சூழ்நிலையும் அவர் வெளியேறிய பின் கொல்கத்தா அணி வீரர்களுக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்த அவர் இது பற்றி ட்விட்டரில் விரிவாக கூறியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“கடந்த இரவில் நிறைய பேசப்பட்டன. அந்த ஷேரிங் அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். இருப்பினும் கௌதம் கம்பீர் தலைமையில் கொல்கத்தா அணியில் முதல் 4 வருடங்களில் நான் விளையாடியதற்கும் அவர் இல்லாமல் கடைசி 2 வருடங்களில் விளையாடியதற்கும் முற்றிலும் வித்தியாசங்கள் இருக்கிறது. அது தான் கடைசி 2 வருடங்களில் என்னுடைய செயல்பாடுகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கும் கேப்டன்ஷிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நான் உறுதியளிக்கிறேன்”

இதையும் படிங்க:IPL 2023 : நாக் அவுட் போட்டியில் அனலாக பந்து வீசிய இளம் மும்பை வீரர் – கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்து 3 புதிய சரித்திர சாதனை

“இருப்பினும் கௌதம் கம்பீர் கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறியதும் அனைத்தும் மாறி விட்டன. அப்போது நான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். ஆனாலும் கொல்கத்தா ரசிகர்கள் மீதான எனது பாசம் எப்போதும் மாறாது. அந்த காலகட்டங்களில் அவர்கள் எனக்கு கொடுத்த ஆதரவை நான் எப்போது மறக்க மாட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கருத்துக்கள் கொல்கத்தா ரசிகர்கள் பற்றியதல்ல. அவர்கள் மீது நான் எப்போதும் மரியாதை வைத்துள்ளேன்” என்று கூறினார்.

Advertisement