IPL 2023 : நாக் அவுட் போட்டியில் அனலாக பந்து வீசிய இளம் மும்பை வீரர் – கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்து 3 புதிய சரித்திர சாதனை

Akash Madhwal
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 டி20 கிரிக்கெட் தொடரில் மே 24ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் பிளே ஆப் போட்டியில் புள்ளி பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்த லக்னோவை 4வது இடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ் 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 182/8 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 33 (20) ரன்களும் கேமரூன் கிரீன் 41 (23) ரன்களும் எடுக்க லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதை தொடர்ந்து 183 ரன்களை துரத்திய லக்னோ சவாலான சேப்பாக்கம் மைதானத்தில் துல்லியமாக பந்து வீசிய மும்பைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆரம்ப முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 16.3 ஓவரிலேயே 101 ரன்களுக்கு சுருண்டது. கெய்ல் மேயர்ஸ் 18, நிக்கோலஸ் பூரான் 0, கேப்டன் க்ருனால் பாண்டியா 8 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 40 (27) ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மாத்வால் 5 விக்கெட்டுகள் சாய்ந்தார்.

- Advertisement -

வரலாற்று சாதனை:
அப்படி மோசமாக தோற்ற லக்னோ இத்தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறி வீட்டுக்குக் கிளம்பியது. மறுபுறம் அபார வெற்றி பெற்ற மும்பை மே 26இல் அகமதாபாத் நகரில் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் ஏற்கனவே நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் சென்னையிடம் தோல்வியை சந்தித்த நடப்பு சாம்பியன் குஜராத்தை எதிர்கொள்கிறது. முன்னதாக இந்த போட்டியில் 183 ரன்களை துரத்திய லக்னோவுக்கு வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மாத்வால் ஆரம்பம் முதலே நெருப்பாக பந்து வீசி தொடக்க வீரர் பிரேரக் மன்கடை 3 (6) ரன்களில் அவுட்டாக்கி மும்பைக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.

அதை விட மிடில் ஓவர்களில் பட்டாசாக பந்து வீசிய அவர் தடுமாற்றமாக பேட்டிங் செய்து கொண்டிருந்த இளம் வீரர் ஆயுஷ் படோனியை 10வது ஓவரின் 4வது பந்தில் க்ளீன் போல்டாக்கி அடுத்த பந்திலேயே முரட்டுத்தனமாக அடிக்கக்கூடிய நிக்கோலஸ் பூரானை கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டினார். அத்துடன் 2 டெயில் எண்டர்களின் விக்கெட்டுகளை எடுத்து மொத்தமாக 3.3 ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டுமே கொடுத்த அவர் 5 விக்கெட்டுகளை சாய்த்து மும்பையின் வெற்றியில் முக்கிய பங்காற்றியதால் சந்தேகமின்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

1. அதன் வாயிலாக 15 வருட ஐபிஎல் வரலாற்றில் தோற்றால் வெளியே செல்ல வேண்டும் என்ற சூழ்நிலையை கொண்ட அழுத்தமான எலிமினேட்டர் போட்டியில் 5 விக்கெட்டுகளை பதிவு செய்த முதல் பவுலர் என்ற புதிய சரித்திரத்தை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் வரலாற்றில் நடைபெற்ற எந்த எலிமினேட்டர் போட்டியிலும் வேறு எந்த பவுலரும் இப்படி 5 விக்கெட்டுகளை எடுத்ததில்லை.

2. அத்துடன் இதுவரை உள்ளூர் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடியுள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத பவுலர் என்ற மற்றுமொரு புதிய சரித்திரத்தை படைத்தார். அந்த பட்டியல்:
1. ஆகாஷ் மாத்வால் : 5/5, லக்னாவுக்கு எதிராக, 2023*
2. அன்கிட் ராஜ்புத் : 5/14, ஹைதராபாத்துக்கு எதிராக, 2018
3. வருண் சக்கரவர்த்தி : 5/20, டெல்லிக்கு எதிராக, 2020

இதையும் படிங்க:LSG vs MI : பழைய ரெக்கார்ட எடுத்து பாருங்க, லக்னோவை செஞ்சி விட்ட மும்பை சாதனை மாஸ் வெற்றி – சிஎஸ்கே’வுடன் மோதுமா?

3. அது போக ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் ஆல் டைம் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் கடந்த 2009 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் இதே போல வெறும் 5 ரன்னை மட்டும் கொடுத்து 5 விக்கெட்களை எடுத்த கும்ப்ளேவின் சாதனையை இன்று அவர் சமன் செய்துள்ளார்.

Advertisement