- Advertisement -
இந்திய கிரிக்கெட்

WTC Final : இதுக்குதான் நான் பவுலிங்கை தேர்வு செய்தேன். டாசுக்கு பிறகு பேசிய ரோஹித் சர்மா – சொன்னது என்ன தெரியுமா?

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாபெரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கியுள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று (ஜூன் 7-ஆம் தேதி) இந்திய நேரப்படி சரியாக 2.30 மணி அளவில் லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த இறுதி போட்டிக்கான டாசும் போட்டு முடிக்கப்பட்டுள்ளது. இந்த டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்துள்ளார்.

- Advertisement -

அதன்படி தற்போது ஆஸ்திரேலிய அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாட தயாராகி வருகிறது. இந்நிலையில் டாசுக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஏன் பந்துவீச்சை தேர்வு செய்தேன் என்பது குறித்த சில விளக்கத்தை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

நாங்கள் இந்த போட்டியில் முதலில் பந்து வீசவே விரும்புகிறோம். ஏனெனில் இந்த மைதானத்தின் தன்மை, வானிலை மற்றும் போட்டியின் சூழ்நிலை என அனைத்தையும் கணித்து நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். அதோடு இந்த மைதானத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று நினைக்கிறேன்.

- Advertisement -

நிச்சயம் இந்த போட்டியில் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வெற்றி பெற விரும்புகிறோம். அதோடு இந்த போட்டியில் நாங்கள் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னர் என அந்த கூட்டணியிலேயே களமிறங்குகிறோம். அந்த ஒரு ஸ்பின்னராக ஜடேஜா விளையாடுவார் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Ashes 2023 : பரம எதிரி ஆஸியை வீழ்த்த இங்கிலாந்தின் மாஸ் திட்டம், ஓய்வு முடிவை வாபஸ் பெற்று அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) அஜின்க்யா ரஹானே, 6) கே.எஸ் பரத், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஷர்துல் தாகூர், 9) முகமது ஷமி, 10) முகமது சிராஜ், 11) உமேஷ் யாதவ்.

- Advertisement -
Published by