தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் மேட்ச்ல கண்டிப்பா திருப்பி அடிப்போம் – ரோஹித் சர்மா உறுதி

Rohit-Sharma
- Advertisement -

கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் துவங்கிய இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது டிசம்பர் 28-ஆம் தேதி நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதன் காரணமாக 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்று கணக்கில் தற்போது தென்னாப்பிரிக்க அணி முன்னிலை வகுத்துள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.

- Advertisement -

அந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும். ஒருவேளை அந்த போட்டியில் தோல்வியடைந்தாலோ அல்லது டிரா ஆனாலோ இந்திய அணி மீண்டும் ஒருமுறை தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும்.

இந்நிலையில் எதிர்வரும் அந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் தென்னாப்பிரிக்க அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : முதலாவது டெஸ்ட் போட்டியின் போது நாங்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாலே தோல்வியை சந்தித்தோம்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக மூன்று நாட்களுக்குள் இப்படி ஒரு தோல்வியை ஏற்றுக் கொள்வது கடினமாகவே உள்ளது. கே.எல் ராகுலை தவிர்த்து மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்பதை அதன்மூலம் தெரிந்து கொண்டிருக்கலாம். மேலும் இங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : இந்த அதிர்ஷ்டம் நமக்கு இல்லாம போச்சே.. நியூசிலாந்து தொடருக்கான தெ.ஆ அணியால்.. இந்திய ரசிகர்கள் ஆதங்கம்

அந்த வகையில் நிச்சயம் இரண்டாவது போட்டிக்கு முன்னதாக சிறப்பான முறையில் தயாராகி தென்னாப்பிரிக்க அணிக்கு நெருக்கடி கொடுத்து வெற்றி பெறும் வகையில் விளையாடுவோம் என்று ரோகித் சர்மா கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தற்போது இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து பல்வேறு பேச்சுக்கள் இருந்தாலும் அணியில் உள்ள அனைவருமே மிகவும் திறமைசாலிகள் தான். அதனால் நிச்சயம் இந்த சரிவிலிருந்து மீண்டு வருவோம் என்று அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement