ஜடேஜா விளையாடாததற்கு என்ன காரணம்? டாஸின் போதே அறிவித்த ரோஹித் சர்மா – விவரம் இதோ

Rohit-and-Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வருகிறது. அதன்படி டிசம்பர் 26-ஆம் தேதி துவங்கிய இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது முதல் நாளின் முடிவில் 59 ஓவர்களை சந்தித்து 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் கே.எல் ராகுல் 70 ரன்களையும், விராட் கோலி 38 ரன்களைடையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

முதல் நாளிலேயே இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்துள்ள வேளையில் எப்படி இந்த சரிவிலிருந்து இந்திய அணி மீளப்போகிறது என்பது குறித்த கவலையும் இந்திய ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதேவேளையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக தமிழக வீரர் அஸ்வின் களமிறங்கி விளையாடி வருகிறார். இந்நிலையில் இப்படி வெளிநாடுகளில் நடைபெற்று வரும் போட்டிகளுக்கு ஜடேஜாவே முதன்மை சுழற்சிளராக தேர்வு செய்யப்பட்டு வரும் வேளையில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏன் இந்த போட்டியில் விளையாடுகிறார் என்பது குறித்த கருத்தை டாசின்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெளிவாக எடுத்துரைத்தார்.

- Advertisement -

அதன்படி ரோகித் சர்மா கூறுகையில் : இந்த போட்டியில் ஜடேஜாவிற்கு பதிலாக அஸ்வின் இடம்பெற்று விளையாடுகிறார். ஏனெனில் ஜடேஜாவிற்கு முதுப்பகுதியில் தசைப்பிடிப்பு இருப்பதன் காரணமாகவே அஸ்வின் இந்த போட்டியில் இடம் பெறுகிறார்.

இதையும் படிங்க : எல்லா இடத்துலயும் ப்ளாக்.. ஒரு வருஷமா பாக்கல.. மகன் பற்றிய தவான் பதிவால் ரசிகர்கள் சோகம்

அஷ்வின் ஒரு தரமான பவுலர் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் ஜடேறியாவிற்கு பதிலாக அவர் இணைவதாகவும் இந்த போட்டியில் நிச்சயம் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் எனவும் ரோகித் சர்மா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement