அவரே முன்வந்து என்கிட்ட ஓகே சொன்னாரு. பொல்லார்டு நீக்கம் குறித்த தகவலை பேசிய – ரோஹித் சர்மா

Pollard
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 59-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்த மும்பை அணியானது தங்களது அபாரமான பந்து வீச்சின் மூலம் சென்னை அணியை 16 ஓவர்களில் 97 ரன்களுக்கு சுருட்டியது. பின்னர் 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 14.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

MI vs CSK

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரரான கைரன் பொல்லார்டு அணியில் சேர்க்கப்படாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. பிளேயிங் லெவனில் பொல்லார்டு இடம்பெறாததை தொடர்ந்து அவர் குறித்த கருத்துக்களே அதிகளவு சமூகவலைதளத்தில் பேசப்படும் விடயமாக மாறியிருந்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ஏன் கைரன் பொல்லார்டு இந்த போட்டியில் சேர்க்கப்படவில்லை என்பது குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெளிவான விளக்கத்தை கொடுத்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நாங்கள் ஏற்கனவே இந்த தொடரில் இருந்து வெளியேறி விட்டோம். இந்த தொடரில் எங்களுக்கு சாதகமாக போட்டிகள் அமையாததால் ஆரம்பத்திலேயே பல தோல்விகள் கண்டுவிட்டோம்.

Pollard

எனவே இனியும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பே இல்லை என்கிற காரணத்தினால் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு சில மாற்றங்களை நாங்கள் அணியில் நிகழ்த்த திட்டமிட்டிருந்தோம். அதன்படி இனிவரும் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களின் திறனை உற்றுநோக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

- Advertisement -

அதன் காரணமாகவே முருகன் அஷ்வின் மற்றும் பொல்லார்டு ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டனர் என்று ரோகித் சர்மா தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய ரோகித் கூறுகையில் : நாங்கள் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப் போகிறோம் என்ற கருத்தினை பொல்லார்டிடம் கொண்டு செல்லும் போது அவரே முன்வந்து அணியின் நலனுக்காக எதையும் செய்ய தயார் என்று கூறிவிட்டார்.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் உதிரி ரன்களை எக்ஸ்ட்ராவாக வாரி வழங்கிய டாப் 7 அணிகள் – லிஸ்ட் இதோ

அதேபோன்று என்னைப்பற்றி யோசிக்க வேண்டாம் அணியின் காம்பினேஷனுக்கு எது சரியோ அதற்காக நீங்கள் மாற்றங்களை செய்து கொள்ளுங்கள் என்று கூறினார். எனவே நாங்கள் இந்த போட்டியில் சில இளம் வீரர்களை விளையாட வைத்து பரிசோதிக்கவும் முடிந்தது என்று ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement