ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் உதிரி ரன்களை எக்ஸ்ட்ராவாக வாரி வழங்கிய டாப் 7 அணிகள் – லிஸ்ட் இதோ

- Advertisement -

ஐபிஎல் தொடர் என்பது டெஸ்ட், ஒருநாள், டி20 போன்ற சர்வதேச கிரிக்கெட் தொடர்களைக் காட்டிலும் எதிர்பாராத த்ரில்லர் திருப்பங்களுடன் ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ராவாக விருந்து படைக்கும் ஒரு உன்னத தொடராகும். இதில் பெரும்பாலும் பவுலர்களை சரமாரியாக அடிக்கும் பேட்ஸ்மேன்கள் தங்களது அணியை வெற்றி பெற வைப்பதற்காக கொஞ்சம் கூட கருணை காட்டாமல் சரமாரியாக அடித்து ரன் மழை பொழிவார்கள். அதனால் ஏற்படும் பதட்டத்தாலேயே பெரும்பாலான தருணங்களில் தரமான பவுலர்கள் கூட நோ பால், ஒய்ட், என எக்ஸ்ட்ரா ரன்களை வாரி வழங்குவார்கள்.

RCB vs PBKS Extras

- Advertisement -

அத்துடன் பேட்ஸ்மேன்கள் உடலில் பட்டு செல்லும் லெக் பைஸ் ரன்கள், விக்கெட் கீப்பர் பந்தை சரியாக பிடிக்காமல் கோட்டை விடுவதால் கொடுக்கப்படும் எக்ஸ்ட்ரா பைஸ் ரன்கள் இவை அனைத்துமே எதிரணியின் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். ஒரு கட்டத்தில் போட்டி மிகவும் பரபரப்பாக விறுவிறுப்பாக கடைசி ஓவர் வரை செல்லும் போது மிகக் குறைந்தளவு ரன்களில் வெற்றி தீர்மானிக்கப்படும். எடுத்துக்காட்டாக ஒருசில அணிகள் ஒருசில சமயங்களில் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்கும்போது தான் அந்த எக்ஸ்ட்ரா ரன்களின் உண்மையான அருமை புரியும்.

பேசாமல் அந்த ஒய்ட், நோ பால்களை போடாமலேயே இருந்திருக்கலாமே என்று பவுலர்களை புலம்ப விடும் அளவுக்கு எக்ஸ்ட்ரா அதாவது தமிழில் உதிரி ரன்கள் என்பது அவ்வபோது விலைமதிப்பற்றதாகிவிடும். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக இடங்களை பதிவு செய்த டாப் 5 அணிகளை பற்றி பார்ப்போம்.

mi

7. மும்பை: 2009இல் தென்னாபிரிக்காவின் செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சச்சின் தலைமையிலான மும்பை 20 ஓவர்களில் 165/8 ரன்கள் எடுத்தது. அதை துரத்திய டெல்லி 17.3 ஓவர்களில் 166/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அன்று 6 பைஸ், 6 லெக் பைஸ், 1 நோ பால், 11 ஒய்ட் என 24 ரன்களை எக்ஸ்ட்ராவாக வழங்கிய மும்பை பவுலர்கள் டெல்லியின் வெற்றி எளிதாக்கினார்கள்.

- Advertisement -

6. மும்பை: 2014 ஐபிஎல் தொடரில் நடந்த 27-வது போட்டியில் பெங்களூருவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த மும்பை 188 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய பெங்களூருவுக்கு 4 பைஸ், 8 லெக் பைஸ், 1 நோ பால், 12 ஒய்ட் என 25 ரன்களை மும்பை பவுலர்கள் எக்ஸ்ட்ராவாக வழங்கிய போதிலும் 19 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வி அடைந்தது. நல்லவேளையாக பெங்களூரு வெற்றி பெறும் அளவுக்கு மும்பை பவுலர்கள் எக்ஸ்ட்ரா ரன்களை வழங்காததால் அந்த அணி வென்றது.

Kkr

5. கொல்கத்தா: 2015 ஐபிஎல் தொடரின்போது நடந்த 54-வது போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 199/6 ரன்கள் சேர்த்து பின்னர் 9 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் 3 லெக் பைஸ், 18 ஒய்ட்ஸ், 5 நோ பால்கள் என மொத்தம் கொல்கத்தா 26 ரன்களை எக்ஸ்ட்ராவாக வழங்காமல் இருந்திருந்தாலே போட்டியில் வெற்றி பெற்றிருக்கலாம்.

- Advertisement -

4. சென்னை: 2009 ஐபிஎல் தொடரில் 47-வது போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னையை எதிர்கொண்ட மும்பை முதலில் பேட்டிங் செய்த 147/5 ரன்கள் எடுத்தது. அதை துரத்திய சென்னை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றாலும் 10 ஒய்ட், 16 லெக் பைஸ் என 26 ரன்களை பந்துவீச்சின் போது எக்ஸ்ட்ராவாக கொடுத்தது. நல்லவேளையாக இலக்கு குறைவாக இருந்ததாலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் அப்போட்டியில் சென்னை தோல்வியை சந்திக்கவில்லை.

Shane Warne Ravindra Jadeja IPL 2008 RR

3. ராஜஸ்தான்: ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008இல் முதல் சாம்பியன் பட்டத்தை வென்ற ராஜஸ்தான் 39-வது போட்டியில் பெங்களூருவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து 198 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த பெங்களூருவுக்கு எதிராக 1 பை, 6 லெக் பைஸ், 18 ஒய்ட், 1 நோ பால் என மொத்தம் 26 ரன்களை எக்ஸ்ட்ராவாக கொடுத்த போதிலும் அதையும் தாண்டி சிறப்பாக பந்துவீசி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2. பஞ்சாப்: 2011 ஐபிஎல் தொடரில் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப்க்கு ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் அதிரடியாக 106 (55) ரன்கள் சேர்க்க அந்த அணி 20 ஓவர்களில் 232/2 ரன்களை எடுத்தது. இவ்வளவு ரன்கள் இருக்கிறதே என்று அசால்டாக பெங்களூருவுக்கு எதிராக பந்து வீசிய பஞ்சாப் பவுலர்கள் 7 பைஸ், 14 லெக் பைஸ், 4 ஒய்ட், 2 நோ பால் என 27 ரன்களை உதிரிகளாக வழங்கிய போதிலும் அதற்கு ஈடாக அற்புதமாக பந்து வீசி 111 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.

Ganguly 1

1. கொல்கத்தா: 2008இல் நடைபெற்ற வரலாற்றின் முதல் ஐபிஎல் தொடரில் 4-வது போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் கங்குலி தலைமையிலான கொல்கத்தா அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த டெக்கான் வெறும் 110 ரன்களுக்கு சுருண்டது. அதில் 4 பைஸ், 8 லெக் பைஸ், 15 ஒய்ட், 1 நோ பால் என டெக்கான் சார்ஜர்ஸ் அணி மீது பரிதாபப்பட்டு கொல்கத்தா பவுலர்கள் 28 ரன்களை எக்ஸ்ட்ராவாக வாரி வழங்கியதால் நல்லவேளையாக அந்த அணி 100 ரன்களை தாண்டியது. இருப்பினும் குறைவான இலக்கை துரத்திய கொல்கத்தா 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்றது.

Advertisement