- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டெஸ்ட் போட்டிகளில் இந்த கஷ்டம் எல்லாம் இருக்கும்.. ரோஹித் சர்மா அளித்த பேட்டி – விவரம் இதோ

இந்திய அணியின் கேப்டனும், அனுபவ வீரருமான ரோகித் சர்மா கடந்த 2007-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 67 டெஸ்ட் போட்டிகள், 273 ஒருநாள் போட்டிகள் மற்றும் 159 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அவர் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை வரை தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட முடிவு செய்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது சிரமம் : ரோஹித் சர்மா

ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை வென்ற கையோடு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். இதன் காரணமாக இன்னும் சில ஆண்டுகள் ஒருநாள் போட்டிகள் மட்டுமே அவர் விளையாட இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் தனது 18 வருட கிரிக்கெட் கரியரில் டெஸ்ட் போட்டிகள் தான் விளையாடுவதற்கு கடினமான ஒரு வடிவம் என்ற கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசி அவர் கூறுகையில் : டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை நீங்கள் ஐந்து நாட்கள் விளையாட வேண்டும். அப்படி 5 நாள் தொடர்ச்சியாக விளையாடுவது மனதளவில் இது ஒரு மிகப்பெரிய சவால்.

அதுமட்டுமின்றி உடலளவிலும் இந்த டெஸ்ட் போட்டிகள் சோர்வை ஏற்படுத்தும். முதல் தர போட்டிகளில் விளையாட துவங்கும் போது இரண்டு அல்லது மூன்று போட்டிகள் கொண்ட ஆட்டத்தில் பங்கேற்று விளையாடுவதால் இளம் வயதிலேயே எவ்வாறு டெஸ்ட் போட்டிளில் விளையாட வேண்டும் என்று தயார்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

தற்போதுள்ள இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளுக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பதை புரிந்து கொண்டு தயாராக வேண்டும், முதல்தர போட்டிகளில் தொடர்ந்து விளையாடினால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தன்மையை கற்றுக்கொள்ளலாம் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடப்பட்டது.

இதையும் படிங்க : உண்மையிலேயே இந்திய அணி செய்த இந்த விடயம் ஏமாற்றமா இருக்கு.. ஆசிய கோப்பை குறித்து – முன்னாள் வீரர் கருத்து

ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அவர் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரோடு ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -