தொடர்ச்சியாக 6 தோல்விகள். கேப்டனாக ரோஹித் யாரை குற்றம் சொல்லியிருக்காரு பாருங்க – விவரம் இதோ

Rohit
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது மிகச் சிறப்பாக நடைபெற்று வரும் வேளையில் ஜாம்பவான் அணிகளான சென்னை மற்றும் மும்பை அணிகள் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. அதிலும் சென்னை அணியாவது ஒரு வெற்றி பெற்று தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள நிலையில் மும்பை அணி தொடர்ச்சியாக தாங்கள் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

MI Mumbai Indians

- Advertisement -

அதிலும் குறிப்பாக லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த போட்டியிலும் தோல்வியை சந்தித்த மும்பை அணியானது இந்த தொடரில் தொடர்ந்து தங்களது 6 ஆவது தோல்வியை இந்த தொடரில் பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ராகுலின் அசத்தலான சதம் காரணமாக 199 ரன்கள் அடித்தால் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு மும்பை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதனை சேஸிங் செய்து விளையாடிய மும்பை அணியானது 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக 18 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு தோல்வியை மும்பை சந்தித்தது. இந்நிலையில் இந்த தொடர் தோல்விகள் குறித்து பேட்டியளித்த மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த தோல்விக்கு எந்த ஒரு காரணத்தையும் நாம் சுட்டிக் காட்ட விரும்பவில்லை. இது போன்ற பெரிய இலக்கினை துரத்தும்போது நிச்சயம் பெரிய பார்ட்னர்ஷிப் என்பது அவசியம்.

Mumbai Indians MI

அந்த வகையில் நாங்கள் இந்த போட்டியில் பார்ட்னர்ஷிப் அமைக்க தவறிவிட்டோம். அதை தவிர்த்து வேறு எந்த காரணமும் இந்த தோல்விக்கு கிடையாது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டியது அவசியம். பும்ரா மட்டும் பந்துவீச்சில் ஒருபுறம் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு மறுமுனையில் இருந்து உதவிகள் கிடைத்தால் மட்டுமே பந்து வீச்சு இன்னும் பலமடையும்.

- Advertisement -

அதோடு சரியான பிளேயிங் லெவனை நாம் விரைவில் கண்டறிந்து களம் இறங்கினால் மட்டுமே இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற முடியும் என ரோஹித் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தற்போது 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளோம். இந்த அனைத்து தோல்விகளுக்கும் ஒரு கேப்டனாக நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

இதையும் படிங்க : இளம்வீரரை அரைமணி நேரம் ஓடவிட்டு கதற கதற கேட்சிங் பிராக்டீஸ் கொடுத்த தல தோனி – சுவாரசிய தகவல்

ஆனால் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக என்னை தயார் செய்து கொண்டு விளையாட வருவேன். அதோடு ஒரு அணியாக அனைவரும் தங்களது பொறுப்பினை உணர்ந்து விளையாட வேண்டியது அவசியம். இனிவரும் போட்டிகளில் நிச்சயம் தோல்விகளில் இருந்து மீண்டு வருவோம் என ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement