- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs PAK : நாங்கள் 181 ரன்கள் குவித்தும் தோல்வியை சந்திக்க இதுவே காரணம் – ரோஹித் சர்மா வெளிப்படை

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான “சூப்பர் 4” சுற்றின் இரண்டாவது ஆட்டம் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக விராட் கோலி அதிகபட்சமாக 44 பந்துகளை சந்தித்து 60 ரன்கள் குவித்து அசத்தினார்.

பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது கடைசி ஒரு பந்து மீதம் இருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்து ஐந்து வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பாக ரிஸ்வான் 71 ரன்களும், நவாஸ் 42 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் : இது போன்ற அழுத்தமான போட்டிகளில் எது வேண்டுமானாலும் நடக்கும். அந்த வகையில் இதுவும் ஒரு அற்புதமான போட்டியாகவே இருந்தது. ரிஸ்வான் மற்றும் நவாஸ் ஆகிய இருவரும் மிகச் சிறப்பாக விளையாடினார்கள்.

அவர்கள் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைக்கும் போது கூட நாங்கள் சிறிதளவும் மனம் தளரவில்லை. ஆனால் அவர்களது ஜோடி நீண்ட நேரம் நின்று மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து விட்டது. அவர்கள் இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்ததால் எங்களை இந்த போட்டியில் வீழ்த்தி விட்டனர் என்று ரோகித் பேசினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இது போன்ற மைதானங்களில் நிச்சயம் சேசிங் செய்யும் போது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும். ஆனாலும் எந்த ஒரு மைதானமாக இருந்தாலும் சரி, சூழ்நிலையாக இருந்தாலும் சரி 180 ரன்கள் என்பது வெற்றிக்கு போதுமான ரன்கள் தான்.

இதையும் படிங்க : எத்தனையோ பேர் கிட்ட என் போன் நம்பர் இருக்கு. ஆனா தோனி மட்டும் தான் பண்ணாரு – விராட் கோலி நெகிழ்ச்சி

இருப்பினும் இந்த போட்டியில் அடைந்த தோல்வி மூலம் பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்டுள்ளேன் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் 181 ரன்கள் குவித்தும் பந்துவீச்சாளர்களின் மோசமான செயல்பாட்டாலும், மோசமான பீல்டிங்காலும் இந்திய அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by