MI vs LSG : கையில இருந்த மேட்சை நாங்க தோக்க இதுவே காரணம். தோல்விக்கு பிறகு – ரோஹித் சர்மா வருத்தம்

Rohit Sharma
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 63-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், க்ருனால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

MI vs LSG

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பாக ஸ்டாய்னிஸ் 89 ரன்களையும், க்ருனால் பாண்டியா 49 ரன்களையும் குவித்தனர்.

பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே குவித்ததால் லக்னோ அணியானது ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அடைந்த தோல்வியின் மூலம் புள்ளி பட்டியலிலும் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

LSG

இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெறும் அளவிற்கு போதுமான சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. எங்களுக்கு கிடைத்த முமென்ட்டத்தை நாங்கள் வீணடித்து விட்டோம். அதோடு இந்த மைதானம் பேட்டிங்கிற்கு கை கொடுத்தது.

- Advertisement -

இந்த இலக்கு நிச்சயம் சேஸிங் செய்யப்பட வேண்டிய ஒரு இலக்கு தான். இருந்தாலும் முதல் 10 வரை தவிர்த்து அடுத்த 10 ஓவர்களில் நாங்கள் கையில் இருந்த போட்டியை தவற விட்டு விட்டோம். இரண்டாவது பாதியில் எங்களால் பேட்டிங்கில் போதுமான அளவு சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த முடியவில்லை. அதுமட்டும் இன்றி பந்துவீச்சின் போது நாங்கள் கடைசி மூன்று ஓவர்களில் 50-க்கும் மேற்பட்ட ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம்.

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் அணி பெற்ற தோல்வியினால் சி.எஸ்.கே அணிக்கு பிரகாசமானா வாய்ப்பு – 4ஆவது இடம் யாருக்கு?

இந்த போட்டியில் நாங்கள் நல்ல நிலையில் இருந்தும் இரண்டாவது பாதியில் ரன்களை குவிக்காததால் இந்த தோல்வி எங்களுக்கு கிடைத்தது என ரோகித் சர்மா வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement