மும்பை இந்தியன்ஸ் அணி பெற்ற தோல்வியினால் சி.எஸ்.கே அணிக்கு பிரகாசமானா வாய்ப்பு – 4ஆவது இடம் யாருக்கு?

LSG
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய 16-வது ஐபிஎல் தொடரானது தற்போது மே மாதம் இரண்டாவது வாரத்தினை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பினை உறுதி செய்துள்ள வேளையில் அடுத்த மூன்று இடங்களில் பிடிக்கப் போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

MI vs LSG

- Advertisement -

இந்த புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் வகித்த வேளையில் நேற்று இரவு நடைபெற்ற முக்கியமான 63-வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டிகளின் முடிவில் அடிப்படையில் இந்த புள்ளி பட்டியலில் பெரிய மாற்றம் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் லக்னோ அணியிடம் மும்பை அணி தோல்வியை சந்தித்ததால் தற்போது புள்ளி பட்டியல் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

அந்த வகையில் தற்போது சென்னை அணி மற்றும் லக்னோ அணி ஆகியவை 13 போட்டிகளின் முடிவில் 15 புள்ளிகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளதால் மும்பை அணி 14 புள்ளிகள் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் மீதமுள்ள 2 போட்டிகளில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய இரு அணிகளுக்கும் வெற்றிபெற்றால் அந்த அணிகளின் முடிவுகளின் படி முதல் நான்கு இடங்கள் உறுதியாகும்.

MI vs LSG

ஆனாலும் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளதால் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. சென்னை அணி இறுதி போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது தோல்வியை சந்தித்தாலோ கூட ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. அதேவேளையில் பெங்களூரு அணி மற்றும் பஞ்சாப் அணி ஆகியவை இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட மும்பை இந்தியன்ஸ் அணியுடன் புள்ளி பட்டியலில் மோதலை சந்திக்கும்.

- Advertisement -

அதேபோன்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இனிவரும் இரண்டு போட்டிகளிலும் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அப்படி அவர்கள் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் புள்ளிபட்டியலில் பெரிய மாற்றம் ஏற்படும். மேலும் மும்பை இந்தியன்ஸ், லக்னோ, சென்னை ஆகிய மூன்று அணிகளும் இனிவரும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யும்.

இதையும் படிங்க : ஐபிஎல்’ல மட்டும் அடிப்பார்னு நினைக்காதீங்க, சுப்மன் கில்லை விட அவர் நேரடியா 2023 உ.கோ’யில் விளையாட தகுதியானவர் – பீட்டர்சன்

கிட்டத்தட்ட தற்போதைய நிலவரப்படி குஜராத் அணியை தவிர்த்து சென்னை, லக்னோ, மும்பை ஆகிய அணிகள் ஒரு போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய சூழ்நிலையிலும், பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நல்ல ரன் ரேட் வைத்திருந்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் மும்பை அணி அடைந்த தோல்வியினால் தற்போதைக்கு சென்னை அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது என்றே கூறலாம்.

Advertisement