MI vs GT : 208 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான். ஆனா நாங்க தோக்க இதுதான் காரணம் – ரோஹித் சர்மா வருத்தம்

Rohit Sharma 1
- Advertisement -

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடப்பு சாம்பியனான ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே முக்கியமான 35-ஆவது லீக் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் அணி மும்பை அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான் வெற்றியை பதிவு செய்தது.

GT vs MI

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியானது தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி மும்பை அணியின் பந்துவீச்சை சமாளித்து 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை குவித்தது.

பின்னர் 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது துவக்கத்திலிருந்தே மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே குவித்ததால் 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியிடம் தோல்வியை சந்தித்தது.

Noor Ahmad

இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த தோல்வி எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ஏனெனில் நாங்கள் பந்துவீச்சின் போது நல்ல கண்ட்ரோலில் தான் இருந்தோம். ஆனால் கடைசி சில ஓவர்களில் அதிகமான ரன்கள் கசிந்து விட்டன.

- Advertisement -

ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு பலம் இருக்கும். அந்த வகையில் எங்களுக்கு பலமே எங்களுடைய பேட்டிங் ஆர்டர் தான். அதனை பயன்படுத்தி இன்றைய போட்டிக்கான இலக்கை எங்களால் எட்டியிருக்க முடியும். ஆனால் இன்றைய நாள் எங்களது நாளாக அமையவில்லை. அதனால் எங்களால் இலக்கை துரத்த முடியவில்லை.

இதையும் படிங்க : GT vs MI : மும்பை அணிக்கெதிரான என்னோட பிளான்லாம் ரொம்ப சிம்பிள் தான். வெற்றிக்கு பிறகு – ஹார்டிக் பாண்டியா பேசியது என்ன?

இந்த போட்டியின் போது நாங்கள் அதிரடியாக ஆட்டத்தை துவங்கி இருந்தால் நிச்சயம் போட்டியில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் இன்றைய போட்டியின் போது நாங்கள் மெதுவாக விளையாடிவிட்டோம் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement