CSK vs MI : நாங்க செய்ஞ்ச இந்த தப்பு தான் சென்னை அணிக்கெதிரான தோல்விக்கு காரணம் – ரோஹித் சர்மா பேட்டி

Rohit Sharma 1
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தின. அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணியானது சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஆரம்பத்திலிருந்தே திணறியது.

Dhoni

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணியானது 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டை இழந்து 139 ரன்களை மட்டுமே குவித்தது. மும்பை அணி சார்பாக நேஹல் வதேரா 64 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 26 ரன்களையும் குவித்தனர்.

பின்னர் 140 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 17.4 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 140 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி சார்பாக துவக்க வீரர்கள் கான்வே 44 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்களையும் குவித்து அசத்தினர்.

SKY

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : எந்த இடத்தில் தவறு நடந்தது என்பது உண்மையிலேயே தெரியவில்லை. ஆனால் இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஸ்கோர் போர்டில் போதுமான அளவு ரன் இல்லாததால் பவுலர்கள் எதிரணிக்கு எதிராக மிகவும் கஷ்டப்பட்டனர்.

- Advertisement -

இந்த போட்டியில் எங்களது பேட்டிங் யூனிட் சிறப்பாக செயல்படவில்லை. அதிலும் குறிப்பாக மிடில் ஆர்டரில் ஸ்பின் பவுலிங்கிற்கு எதிராக விளையாடும் ஒரு இந்திய வீரர் தேவை என்ற நிலையில் திலக் வர்மாவும் இந்த ஆட்டத்தில் பங்கேற்காதது எங்களுக்கு பின்னடைவை தந்தது. துவக்கத்திலேயே இந்த போட்டியில் 16 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை நாங்கள் இழந்ததால் பெரிய அளவில் எங்களால் ரன் குவிக்க முடியாமல் போனது.

இதையும் படிங்க : CSK vs MI : டாஸ் போடும்போதே எனக்கு டவுட்டா தான் இருந்துச்சி. மும்பையை வீழ்த்திய பிறகு – தல தோனி அளித்த பேட்டி இதோ

இருந்தாலும் இந்த போட்டியில் பியூஷ் சாவ்லா அருமையாக பந்து வீசினார். அவரோடு இணைந்து மற்ற பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் அதுதான் அணிக்கும் தேவை. இனிவரும் போட்டிகளில் அனைவரும் முன்வந்து தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நினைக்கிறேன். நிச்சயம் அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம் என ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது

Advertisement