விராட் கோலியின் பார்ம் குறித்து நீங்க என்ன சொல்றீங்க? பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ரோஹித்

Rohith-2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்தது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி தொடரை வென்றிருந்தது. இந்த டி20 தொடருக்கு முன்னதாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு முதல் டி20 போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டது. அதன்படி இந்திய அணியின் முன்னணி வீரரான விராத் கோலிக்கும் முதல் டி20 போட்டியின் போது ஓய்வு அளிக்கப்பட்டது.

kohli 1

- Advertisement -

டெஸ்ட் போட்டியிலேயே சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றத்தை அளித்த விராட் கோலி டி20 தொடரிலாவது அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இரண்டாவது டி20 போட்டியில் 1 ரன்னும், மூன்றாவது டி20 போட்டியில் 11 ரன்களும் எடுத்து மீண்டும் ஒருமுறை கோலி ஏமாற்றத்தை கொடுத்தார். கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான ஃபார்ம் காரணமாக ரன் குவிக்க தடுமாறி வரும் கோலியின் சொதப்பல் இந்த தொடரிலும் தொடர்ந்தது. எனவே விராட் கோலியின் இந்த மோசமான பார்ம் குறித்த கருத்துக்களும், அவர் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், அவருக்கு தற்காலிக ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் பல கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் உலா வருகின்றன.

அதே வேளையில் பல முன்னாள் வீரர்களும் கோலியின் மோசமான பேட்டிங் பார்ம் குறித்து சுட்டி காண்பித்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டி20 தொடர் முடிந்த பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் கூறுகையில் :

Virat-Kohli

வெளியில் இருந்து விளையாட்டினை பார்ப்பவர்களுக்கு அணிக்குள் என்ன நடக்கிறது என்று முற்றிலுமாக தெரியாது. நாங்கள் ஒரு அணியை மிகச் சிறப்பாக உருவாக்குகிறோம். அதன் பின்னால் நிறைய சிந்தனை இருக்கும். அதேபோன்று நிலையான வீரர்களுக்கு ஆதரவளித்து வாய்ப்புகளை வழங்கியு வருகிறோம். வெளியில் இருந்து நீங்கள் அறியாத விஷயத்தை பேசுவது தவறான ஒன்று. விராட் கோலியின் பார்மை பற்றி பேசினால் ஒன்று மட்டும்தான் கூற முடியும்.

- Advertisement -

எல்லா வீரர்களுக்குமே ஏற்றத்தாழ்வு என்பது வரும். அந்த வகையில் தரமான வீரர்கள் கூட சில முறை பேட்டிங்கில் பார்ம் இன்றி தவித்துள்ளனர். ஆனால் இந்த நிலையால் ஒரு மாபெரும் வீரரின் தரம் பாதிக்கப்படாது. ஒரு வீரர் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட வேளையில் ஒன்றிரண்டு தொடர்களில் அவர்கள் மோசமாக விளையாடும் சூழலும் ஏற்படும். அந்த வகையில் தற்போது விராட் கோலி ஒன்றிரண்டு தொடர்களில் சொதப்பினால் கூட அவருடைய தரம் சற்றும் குறைந்து போகாது.

இதையும் படிங்க : விராட் கோலியின் மதிப்பு தெரியல, சீக்கிரம் ட்ராப் பண்ணுங்க எங்களுக்கும் நல்லது தான் – ஆஸி வீரரின் வைரல் கருத்து

அவரைப் போன்ற வீரருடைய முக்கியத்துவம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். விமர்சனம் செய்வதற்கு மற்றவர்களுக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. ஆனால் அதனை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று விராட் கோலிக்கு ஆதரவாக ரோகித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement