IND vs ENG : 3 ஆவது போட்டியில் பும்ராவின் நீக்கத்திற்கான காரணம் என்ன? – கேப்டன் ரோஹித் சர்மா பதில்

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளும் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதனை தொடர்ந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Team India Jasprit Bumrah

- Advertisement -

இதன் காரணமாக இந்த தொடர்பானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ள வேளையில் இன்று மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டுடிராபோர்டு மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதனை தொடர்ந்து இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் யாரும் எதிர்பாராத விதமாக இன்றைய போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாட மாட்டார் என்று கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார்.

Bumrah 1

தற்போதைய இந்திய அணியில் மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும் விக்கெட் டேக்கரான பும்ரா இந்த போட்டியில் விளையாடாதது இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. அதே வேளையில் அவருக்கு பதிலாக அணியில் இளம் வீரரான முகமது சிராஜ் விளையாடுவதாகவும் டாசுக்கு பிறகு ரோகித் சர்மா அறிவித்தார். அதனை தொடர்ந்து இந்த போட்டியில் பும்ரா விளையாடாததற்கான காரணத்தை கூறிய ரோகித் அதில் குறிப்பிட்டதாவது :

- Advertisement -

பும்ரா இந்த போட்டிக்கு முன்னர் முதுகு பிடிப்பு காரணமாக அவதிப்பட்டார். அவரது இந்த காயத்தை பெரிதாக்க வேண்டாம் என்றும் அவரை இந்த போட்டியில் விளையாட வைத்து ரிஸ்க் எடுப்பதை விட முன்னெச்சரிக்கையாக அவருக்கு ஓய்வு கொடுப்பது அவசியம் என்று கருதியே பும்ராவை இந்த போட்டியில் சேர்க்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் விளையாடுவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் வெற்றியடைய ரிஷப் பண்ட் இதை கொடுக்கணும் – முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஆலோசனை

அதேபோன்று பிசிசிஐ தரப்பில் பும்ராவின் காயம் குறித்த தகவலை வெளியிடுகையில் : பும்ரா இந்த போட்டியில் முதுகு பிடிப்பு காரணமாகவே விளையாடவில்லை என்றும் அதன் காரணமாகவே இன்றைய போட்டியில் சிராஜ் விளையாடுவதாகவும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement