வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் வெற்றியடைய ரிஷப் பண்ட் இதை கொடுக்கணும் – முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஆலோசனை

RIshabh Pant Poor Batting
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் கிரிக்கெட் தொடர்களில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டியை தவிர எஞ்சிய அனைத்துப் போட்டிகளிலும் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தில் பர்மிங்காம் நகரில் முதலாவதாக நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் 98/5 என இந்தியா தடுமாறிய போது பயமறியாத காளையாக சீறிப்பாயும் வகையில் வெறும் 89 பந்துகளில் சதமடித்து டி20 இன்னிங்ஸ் விளையாடிய அவர் 143 (111) ரன்களை 131.53 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து காப்பாற்றினார். அவரின் ஆட்டத்திலேயே அப்போட்டியில் முதல் 3 நாட்கள் ஓங்கிய இந்தியாவின் கை கடைசி 2 நாட்களில் சுமாரான பந்துவீச்சால் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

Rishabh Pant Ind vs ENg

- Advertisement -

ஆனால் அதன்பின் நடந்த டி20 தொடரில் இதற்கு முந்தைய காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறினார் என்பதற்காக முதல் முறையாக தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பைப் பெற்ற அவர் அதிலும் சுமாராகவே செயல்பட்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரிலும் இதற்கு முந்தைய காலங்களில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய அவருக்கு 3-வது இடத்தில் வாய்ப்பளிக்கப்பட்டது. அதிலும் சொதப்பும் வகையில் டக் அவுட்டான அவர் இந்தியாவின் 100 ரன்கள் வித்தியாச தோல்விக்கு முக்கிய பங்காற்றினார்.

வெள்ளைப்பந்து தடுமாற்றம்:
இத்தனைக்கும் பொறுமையாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் சரவெடியாக பேட்டிங் செய்யும் அவர் ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற சவாலான வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியால் கூட படைக்க முடியாத சாதனையை படைத்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தையும் முத்திரையையும் பதித்துள்ளார். ஆனால் அதிரடி காட்ட வேண்டிய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை அனைவரின் மனதில் நிற்கும் அளவுக்கு ஒரு போட்டியில் கூட அவர் சிறப்பாக செயல்படாதது ஆச்சரியமாகவே இருக்கிறது.

pant 1

டெஸ்ட் போட்டிகளில் உள்வட்டத்திற்கு வெளியே குறைந்த அளவிலான ஃபீல்டர்கள் மட்டுமே இருப்பார்கள். ஆனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பவர்ப்ளே தவிர பெரும்பாலான ஓவர்களில் வெளியே நிறைய ஃபீல்டர்கள் இருப்பார்கள். எனவே வழக்கமாக அதிரடி காட்ட முயலும் அவர் ஏதேனும் குருட்டுத்தனமான சாட்டை அடித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழப்பது தொடர்கதையாகி வருகிறது. அதற்காகவே தொடக்க வீரராக வழங்கப்பட்ட வாய்ப்பையும் அவர் பயன்படுத்தத் தவறி வருகிறார்.

- Advertisement -

அதிகப்படியான அதிரடி:
இந்நிலையில் ரிஷப் பண்ட் போன்ற தரமான பேட்ஸ்மேன் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தடுமாறுவதற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் காட்டும் அதிரடியை காட்டத்தவறுவதே காரணம் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கணித்துள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் தீவிரமான ஆக்ரோஷமான அதிரடியை காட்டாதீர்கள் என்றே ரிஷப் பண்ட்க்கு நான் கூறுவேன். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஆக்ரோசமாக இருப்பதற்கான சலுகையை அணி நிர்வாகத்திடம் அவர் பெற்றுள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதை செய்யும் அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கவனக் குறைவுடன் செய்கிறார். 15 ஓவர்கள் விளையாடினால் போட்டியை இந்தியாவிற்கு வென்று தரக்கூடிய திறமையை பெற்றுள்ள அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அதிரடி எனும் அணுகுமுறையை அதிகப்படியாக நினைக்கிறார்” என்று கூறினார்.

Vaughan

அதற்காக ரிஷப் பண்ட் அதிரடியை குறைக்கக் கூடாது என்று தெரிவிக்கும் மைக்கல் வாகன் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தற்போதும் காட்டும் அதிரடியை விட இன்னும் அதிரடியாக விளையாட வேண்டும் ஆனால் அதை கவனத்துடன் காட்டினால் 3 வகையான கிரிக்கெட்டிலும் அவரால் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் நல்ல தரமான வீரர் என்பதால் அவருக்கு முழு சுதந்திரத்தை அணி நிர்வாகம் கொடுக்க வேண்டும். அவர் அவுட்டாகும் ஷாட்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. என்னைப் பொருத்தவரை களமிறங்கி இந்தியாவுக்கு அதிரடியாக ரன்களை சேர்ப்பதே அவரின் வேலையாகும்”

இதையும் படிங்க : எல்லோருக்கும் ரோஹித் சர்மாவின் இந்த வீக்னெஸ் தெரியும், சீக்கிரம் சரிசெய்யணும் – முன்னாள் வீரர் கோரிக்கை

“அவர் கையில் பேட்டை எடுத்தால் எதிரணியை குழப்ப வேண்டும். அவருக்கு சுதந்திரத்துடன் விளையாடும் வாய்ப்பை தொடர்ச்சியாக கொடுத்தால் குறைந்தது 3 போட்டியிலேயே அவரால் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் வெற்றிகரமாக வர முடியும் என்று நான் பந்தயம் கட்டுவேன். அவர் தன்னுடைய அதிரடியால் போட்டியை மாற்றக் கூடியவர். ரிஷப் பண்ட் என்றவர் எப்போதும் அதிரடியாக இருப்பதே அவருக்கு வெற்றியை தரக் கூடியதாகும்” என்று கூறினார்.

Advertisement