எல்லோருக்கும் ரோஹித் சர்மாவின் இந்த வீக்னெஸ் தெரியும், சீக்கிரம் சரிசெய்யணும் – முன்னாள் வீரர் கோரிக்கை

rohith 1
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி ஜூலை 17-ஆம் தேதியன்று மான்செஸ்டரில் நடைபெறுகிறது. ஓவல் மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியாவுக்கு லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாச தோல்வியை பரிசளித்த இங்கிலாந்து தக்க பதிலடி கொடுத்து 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. எனவே வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்கு இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிரமாகப் போராட உள்ளனர்.

Rohit and Dhawan

- Advertisement -

முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் வெறும் 111 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா மட்டுமே அதிரடியாக 76* ரன்கள் குவித்து எளிதான வெற்றியை பரிசாக்கினார். ஆனால் 247 என்ற இலக்கை துரத்திய 2-வது போட்டியில் 10 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா இங்கிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி வீசிய மிகச்சிறப்பான பந்தில் எல்பிடபிள்யூ முறையில் டக் அவுட்டானது ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை கொடுத்து தோல்விக்கு முக்கிய பங்காற்றியது.

இடதுகைக்கு தடுமாற்றம்:
பொதுவாக கிரிக்கெட்டில் வலதுகை பேட்ஸ்மென்கள் இடது கை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறுவது இயற்கையான ஒன்றாகும். அதுவும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்தால் நிச்சயமாக வலதுகை பேட்ஸ்மேன்களின் நிலைமை திண்டாட்டமாகிவிடும். ஆனால் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் தங்களது அனுபவத்தால் நாளடைவில் அதையும் சிறப்பாக எதிர்கொள்ளும் திறமையை கற்று தங்களது நாட்டுக்கு வெற்றியைத் தேடித் தருவார்கள்.

Shaheen-afridi

இருப்பினும் இத்தனை வருடங்கள் விளையாடி உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை பல்வேறு சூழ்நிலைகளில் எதிர்கொண்ட ரோகித் சர்மா இன்னும் அந்த பிரச்சனையை சரி செய்யாமலேயே இருந்து வருகிறார். அவரின் இந்த பலவீனத்தை தெரிந்த எதிரணி பவுலர்கள் நிறைய தருணங்களில் முக்கிய போட்டிகளில் அந்த யுக்தியை பயன்படுத்தி கச்சிதமாக பந்துவீசி அவுட்டாக்கி விடுகிறார்கள். எடுத்துக்காட்டாக கடந்த 2021இல் துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி வீசிய முதல் பந்திலேயே ரோஹித் சர்மா இதேபோல் எல்பிடபிள்யூ முறையில் கோல்டன் டக் அவுட்டானதை கூறலாம்.

- Advertisement -

சீக்கிரம் சரிசெய்யுங்க:
அதே யுக்தியை தான் 2-வது போட்டியில் ரீஸ் டாப்லியை வைத்து கச்சிதமாக செய்து இங்கிலாந்து வெற்றி கண்டதாக கூறும் முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் 2022, 2023 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் 2 ஐசிசி உலக கோப்பைகள் நடைபெறுவதால் அதற்கு முன்பாக இந்த பலவீனத்தை ரோஹித் சர்மா விரைவில் சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி 2-வது போட்டியில் இந்தியா தோற்றதற்கு பின் அவர் பேசியது பின்வருமாறு. “பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது ரோகித் சர்மா மொத்தமாக தடுமாறுவார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதை தெரிந்த ரீஸ் டாப்லி மிகச் சிறப்பாக பந்து வீசினார். அப்போட்டியில் அவுட்டாவதற்கு முன்பாக ரோஹித் அடித்த அந்த ஷாட்டும் சுமாரானதாகவே இருந்தது. எனவே இதில் அவர் முன்னேற்றத்தைக் காண வேண்டும்”

Jaffer

“அதேபோல் ஷிகர் தவான் வழக்கத்திற்கு மாறான மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அதிலும் முதல் போட்டியில் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த அவர் இப்போட்டியில் தடுமாறினார். சமீப காலங்களில் நிறைய கிரிக்கெட் அவர் விளையாடாததே அதற்கு ஒரு காரணமாக அமைந்தது” என்று கூறினார். மேலும் முதல் போட்டியில் பெரிய வெற்றியை சுவைத்த காரணத்தால் 2-வது போட்டியில் பதற்றமடையாமல் விளையாடலாம் என்று நினைத்த இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்ரேட்டை கட்டுக்குள் வைத்து எதிரணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்யாததே தோல்விக்கு காரணமாக இருந்ததாகவும் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இப்போதெல்லாம் அந்த சீரிஸ் காணாம போய்விட்டது – வருத்தத்துடன் பிசிசிஐ, ஐசிசிக்கு ரோஹித் சர்மா கோரிக்கை

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “இந்திய பேட்ஸ்மேன்கள் 2-வது போட்டியில் கொஞ்சம் பயத்துடன் பேட்டிங் செய்ய வந்தார்கள். அவர்கள் மனநிறைவு கொண்டவர்கள் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் ஆரம்பத்திலேயே 4 மெய்டன் ஓவர்களை சந்தித்தது இங்கிலாந்துக்கு மேலும் தன்னம்பிக்கை உண்டாக்கியது. அத்துடன் அதிரடியை காட்ட வேண்டும் என்ற எண்ணமும் ஆரம்பத்திலேயே காணாமல் போய்விட்டது. ஆரம்பம் முதலே தரையுடன் அடித்து ரன்களை சேர்க்க வேண்டுமென்ற எண்ணத்துடன் விளையாடவில்லை” என்று கூறினார்.

Advertisement