இப்போதெல்லாம் அந்த சீரிஸ் காணாம போய்விட்டது – வருத்தத்துடன் பிசிசிஐ, ஐசிசிக்கு ரோஹித் சர்மா கோரிக்கை

Rohith
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டி ஜூலை 17-ஆம் தேதியன்று மான்செஸ்டரில் நடைபெறுகிறது. இத்தொடரில் ஓவலில் நடந்த முதல் போட்டியில் அபாரமான பந்து வீச்சால் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியாவை லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது பதிலடி கொடுத்துள்ளது. எனவே வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் வெல்வதற்கு இரு அணிகளும் தீவிரமாக போராட தயாராகியுள்ளன.

இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை தொடர்ந்து வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் ஒருநாள் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுக்கும் நிலையில் ஷிகர் தவான் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதன்பின் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகித் சர்மா திரும்பினாலும் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்க உள்ளனர். சமீப காலங்களில் இப்படி முதன்மையான வீரர்கள் தொடர்ச்சியான போட்டிகளில் இணைந்து விளையாடாமல் அடிக்கடி ஓய்வெடுக்கும் நிலைமையை பார்த்த ரசிகர்களுக்கு தற்போது சாதாரணமாகிவிட்டது. இதற்கு நவீன கிரிக்கெட்டில் உருவெடுத்துள்ள ஐபிஎல் போன்ற தனியார் டி20 போட்டிகள் முக்கிய காரணமாகிறது.

- Advertisement -

தரமற்ற இருதரப்பு:
அதில் விளையாடும் வீரர்கள் தங்களது பணிச்சுமையை மேற்கோள் காட்டி நாட்டுக்காக விளையாடும் போது சிறிய தொடர்களில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஓய்வை கேட்கிறார்கள். அதுபோக அந்த தொடர்களின் போட்டியின் தரத்தை பொறுத்து அவர்களுக்கு கிரிக்கெட் வாரியமும் ஓய்வளிக்கின்றது. இதுவே உலக கோப்பையாக இருந்தால் மேற்குறிப்பிட்ட வீரர்கள் நிச்சயம் ஓய்வெடுக்க மாட்டார்கள். ஆனால் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற சற்று பலவீனமான அணிகளை சாய்க்க நம்முடைய இளம் வீரர்களே போதும் என்ற உண்மையான கோட்பாடும் ஓய்வெடுக்கலாம் என்ற எண்ணத்தை சீனியர் வீரர்களுக்கு ஏற்படுத்துகிறது.

இந்தியா – இலங்கை, இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் போன்ற இரு அணிகள் மோதும் இருதரப்பு தொடர்களில் ஒரு அணி சற்று பலவீனமாக இருப்பதே அதற்கு அடிப்படையான காரணமாகும். நீங்களே பாருங்கள் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து தொடரை முடித்துவிட்டு வலுவான இங்கிலாந்துக்கு எதிராக பங்கேற்ற முக்கிய வீரர்கள் அடுத்ததாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஓய்வெடுக்கிறார்கள். மொத்தத்தில் இரு அணிகள் மோதும் 10க்கு 7 இருதரப்பு (பை-லேட்ரல்) தொடர்கள் தரமற்றதாகவே இருக்கிறது.

- Advertisement -

ரோஹித்தின் வருத்தம்:
ஆனால் சில வருடங்களுக்கு முன்பாக 3 அணிகள் மோதிய முத்தரப்பு தொடர்கள் இருதரப்பு தொடர்களை விட ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகவும் தரமாகவும் இருந்தது. ஏனெனில் 3 அணிகள் பங்கேற்கும்போது லீக் சுற்றில் இத்தனை வெற்றிகளை பெற வேண்டும், அபாரமாக வென்றால் போனஸ் புள்ளிகள், சிறந்த 2 அணிகள் மட்டும் பைனலில் கோப்பைக்காக மோதும் என்பது போன்ற சுவாரஸ்யங்கள் இருப்பதால் மினி உலகக் கோப்பை போன்ற அனுபவத்தையும் தரத்தையும் முத்தரப்பு தொடரில் தன்னகத்தே கொண்டுள்ளது. அதுபோல் 3, 4 நாடுகள் ஒன்றாக மோதும்போது ஒருசில தரமற்ற தொடர்கள் குறைந்து வீரர்களின் பணிச்சுமையும் குறைவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே தாம் சிறிய வயதில் இருந்தபோது நடந்த அதுபோன்ற தொடர்கள் தற்போது நடைபெறுவதில்லை என்று வருத்தத்துடன் தெரிவிக்கும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் அது போன்ற தொடர்களை நடத்த வேண்டுமென பிசிசிஐ மற்றும் ஐசிசிக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இருதரப்பு தொடர்கள் நடத்தப்படுவது முக்கியமானது என்றாலும் அதை வேறு சிறந்த வழியில் நிர்வகிக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் இருதரப்பு தொடர்களில் விளையாட வேண்டும். ஆனால் போட்டி அட்டவணைகளை உருவாக்கும் போது இடைவெளி இருக்க வேண்டும்”

- Advertisement -

“நான் சிறுவனாக வளர்ந்த போது நிறைய முத்தரப்பு அல்லது நாற்தரப்பு தொடர்களைப் பார்த்துள்ளேன். ஆனால் தற்போது அது முற்றிலுமாக நின்றுபோய் விட்டது. எனவே அது போன்ற போட்டிகள் தான் ஒரு அணிக்கு தேவையான நேரங்களை கொடுத்து புத்துணர்ச்சியைக் கொடுத்து தரமான தொடர்களை விளையாட உதவும் என்று நினைக்கிறேன். நாட்டுக்காக விளையாடும் போது அது போன்ற தரமான தொடர்கள் உங்களை உத்வேகத்துடன் விளையாடுவதற்கும் உதவும்”

“இருதரப்பு தொடர்களை திட்டமிடும் போது ஒவ்வொரு போட்டிக்கும் இடையேயான நேரத்தை இன்னும் சற்று நல்லபடியாக நிர்வகிக்க வேண்டும். இதை இந்தியாவுக்கு மட்டுமல்ல அனைத்து வாரியங்களிடமும் கேட்டுக்கொள்கிறேன். அது நடந்தால் தரமான வீரர்கள் உங்களது நாட்டுக்காக அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவதைப் பார்க்க முடியும்.

இதையும் படிங்க : இப்போதும் சொல்றேன் 110 சதங்கள் அடிப்பார், விராட் கோலிக்கு முன்னாள் பாக் வீரர் மீண்டும் முழுமையான ஆதரவு

ஆனால் அடுத்தடுத்த இரு தரப்பு போட்டிகளில் விளையாடும் போது வீரர்களின் பணிச் சுமையையும் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் வெளி உலகில் இருந்து பார்ப்பவர்களுக்கு வீரர்களின் பணிச்சுமை தெரியாது. அது கிரிக்கெட்டின் தரத்தையும் பாதிக்கக் கூடியதாக அமைகிறது” என்று கூறினார்.

Advertisement