இப்போதும் சொல்றேன் 110 சதங்கள் அடிப்பார், விராட் கோலிக்கு முன்னாள் பாக் வீரர் மீண்டும் முழுமையான ஆதரவு

Kohli
- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடந்த 3 வருடங்களாக சதமடிக்க முடியவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடைசியாக கடந்த 2019இல் சதமடித்திருந்த அவர் அதன்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 100 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக அடுத்த சதத்தை அடிக்க முடியாமல் தவிப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். அதிலிருந்து விடுபடுவதற்காக இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் வகித்த கேப்டன்ஷிப் பொறுப்புகளை ராஜினாமா செய்த அவர் கடந்த ஜனவரியிலிருந்து சாதாரண வீரராக விளையாடத் துவங்கியுள்ளார்.

அதனால் விரைவில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் எதிர்பாராத வகையில் ஐபிஎல் 2022 தொடரில் 3 முறை கோல்டன் டக் அவுட்டானது உட்பட மும்பைவிட சுமாராக செயல்பட்டதால் பொறுமையிழந்த அனைவரும் அணியிலிருந்து நீக்குமாறு கேட்கத் தொடங்கியுள்ளார்கள். குறிப்பாக பெரிய பெயரை மட்டும் வைத்துக்கொண்டு எத்தனை நாட்கள் ரன்களை அடிக்காமல் விளையாடுவார்கள் என்று முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில்தேவ் முன்வைத்த விமர்சனம் புயலைக் கிளப்பியது.

- Advertisement -

பெருகும் ஆதரவு:
இத்தனைக்கும் ஏற்கனவே 20000க்கும் மேற்பட்ட ரன்களையும் 70 சதங்களையும் அடித்துள்ள அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக ஏற்கனவே தன்னை நிரூபித்துள்ளார். மேலும் இந்த சோதனை காலங்களிலும் அவ்வப்போதுக்கு 40, 70 போன்ற நல்ல ரன்களை எடுத்து வரும் அவரை சதமடிக்கவில்லை என்பதால் பார்ம் அவுட் என்றே அனைவரும் பேசுகின்றனர்.

ஆனால் சர்வதேச அரங்கில் 70 சதங்களை அடிப்பது சிறிய விஷயமல்ல என்று தெரிவிக்கும் சிலர் விராட் கோலிக்கு தங்களின் முழு ஆதரவையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக அவரைப்போன்ற பேட்ஸ்மேன் எங்களது நாட்டில் விளையாடியிருந்தால் இவ்வளவு விமர்சனத்தை வைக்க மாட்டோம் என்று கிரேம் ஸ்வான், கெவின் பீட்டர்சன் போன்ற வெளிநாட்டவர்கள் வெளிப்படையான ஆதரவை கொடுக்கின்றனர்.

- Advertisement -

அதேபோல் கடினமான தருணத்தில் விமர்சிக்காமல் ஆதரவை கொடுத்தால் தானே அவரால் பார்முக்கு திரும்ப முடியும் என்ற வகையில் “இதுவும் கடந்து போகும்” என பரம எதிரியான பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ட்வீட் போட்டு ஆதரவளித்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. மேலும் நிறைய பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அவருக்கு ஆதரவு கொடுத்து வரும் நிலையில் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் மீண்டும் விராட் கோலிக்கு ஆதரவை கொடுத்துள்ளார்.

110 சதங்கள்:
100 சதங்களை அடித்துள்ள சச்சினின் சாதனையை முறியடிக்க விராட் கோலியால் மட்டுமே முடியும் என்று தெரிவித்த அவர் நிச்சயம் 110 சதங்களை அடிப்பார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஆதரவை தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது இரு மடங்கு விமர்சனங்களை தினம்தோறும் விராட் கோலி சந்திப்பதால் மீண்டும் ஒரு வலுவான ஆதரவை கொடுக்கும் வகையில் தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “ஒரு பாகிஸ்தானியராக 70 சதங்களை அடித்துள்ளதால் விராட் கோலியை நான் ஆதரிக்கிறேன். 70 சதங்கள் என்பது விளையாட்டல்ல. அதை சாதாரண வீரர்களால் அடிக்க முடியாது, மிகச் சிறந்த வீரர்களால் மட்டுமே முடியும். இந்த மோசமான தருணத்திலிருந்து வெளிவரும்போது அவர் முற்றிலும் மாறுபட்டவராக இருப்பார்

- Advertisement -

“இருப்பினும் இதிலிருந்து மீள்வதற்காக அவர் சில வேலைகளைச் செய்யவேண்டியுள்ளது. முதலில் கேப்டன்ஷிப் விஷயத்தில் உங்களுக்கு ஏற்பட்ட மனக் கசப்புகளை மறந்து வெறும் பேட்ஸ்மேனாக உங்களது ஆட்டத்தில் கவனத்தை செலுத்துங்கள். அப்போது ரன்கள் வரவில்லையா? அதற்காக விமர்சனங்களை சந்திக்கிறீர்களா? என்பது பிரச்சனை கிடையாது. ஏனெனில் இவை அனைத்தும் உங்களை மேலும் வலுவாக்கக் கூடியது. நீங்கள் இன்னும் 30 சதங்கள் மட்டுமே அடிக்க வேண்டும். ஏற்கனவே நீங்கள் 110 சதங்களை அடிப்பீர்கள் என்று நான் கணித்துள்ளேன். இன்னும் கூட நீங்கள் இளமையாகவும் நல்ல பிட்டாகவும் உள்ளீர்கள்” என்று கூறினார்.

2019 முதல் சதமடிக்கவில்லை என்று அழுத்தத்தில் இருந்த விராட் கோலியை கடந்த டிசம்பரில் பிசிசிஐ வலுக்கட்டாயமாக ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது மேலும் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கும் சோயப் அக்தர் அதை மறந்துவிட்டு பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தினால் கண்டிப்பாக ஏற்கனவே கூறியது போல் 100, 110 சதங்களை அடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.

“எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. பந்து வீச்சாளர்கள் பலமான ஒருவருக்கு எதிராக பந்து வீசுகிறோம் என்பதை அறிவார்கள். எனவே நீங்கள் அந்த பலத்துடன் விளையாட வேண்டும். பதற்றமடையாமல் உங்கள் மீது கவனத்தை வைத்து விளையாடுங்கள். அதிரடியாக பேட்டிங் செய்தால் உங்களால் ரன்கள் அடிக்க முடியாது. பந்தை பேட்டின் மிடில் பகுதியில் அடிக்க முயற்சியுங்கள். இந்த வழியில் இருந்து உங்களின் கரடுமுரடான பகுதிகளை நகர்த்த முடியாது என்பதால் சில நாட்கள் சமூக வலைதளங்களை விட்டுவிட்டு விமர்சனங்களையும் மறந்து அமைதியாக விளையாடத் துவங்குங்கள்” என்று கூறினார்.

Advertisement