WTC Final : அவர் பிளேயிங் லெவன்ல விளையாட மாட்டார்னு நான் சொல்லவே இல்லையே – ரோஹித் சர்மா பேட்டி

Rohit Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் மதியம் மூன்று மணியளவில் துவங்குகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன.

IND vs AUS

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்பதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற மாட்டார் என்று பலராலும் கூறப்பட்டு வருகிறது.

ஏனெனில் ஓவல் மைதானம் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று ஏற்கனவே ஆடுகளம் பராமரிப்பாளர் தெரிவித்துள்ளதால் இந்திய அணி ரவீந்திர ஜடேஜா மற்றும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகிய கூட்டணியுடனே செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக வீரர் அஸ்வினுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது.

Ashwin-1

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் : நான் அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம் பெற மாட்டார் என்று கூறவே இல்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்து பேசிய அவர் :

- Advertisement -

நான் ஒருபோதும் அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை என்று சொல்லவில்லை. போட்டி துவங்குவதற்கு முன்னர் மைதானத்தின் தன்மையை நாங்கள் முற்றிலுமாக ஆராய உள்ளோம். ஒருவேளை மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் இடம் பெற்று விளையாடுவார்கள்.

இதையும் படிங்க : WTC Final : எது நாங்க களைப்பா இருக்கோமா? இந்தியாவை குறைத்து பேசிய ரிக்கி பாண்டிங்கிற்கு – சுனில் கவாஸ்கர் பதிலடி

அப்படியில்லை என்றால் மைதானத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, தன்மைக்கு ஏற்றவாறு இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்படும் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார். இருப்பினும் இந்த ஓவல் மைதானம் நிச்சயம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதனால் பேட்டிங்கில் கை கொடுக்க கூடிய ஜடேஜா தான் இடம்பெறுவார் என்று பலராலும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement