ரோகித் சர்மா சொன்ன அந்த வார்த்தை..7வது டவுனில் இறக்கப்பட்ட விஜய் சங்கர்..அப்செட் ஆன தினேஷ் கார்த்திக்

karthik3
- Advertisement -

இந்தியா-வங்கதேசம்-இலங்கைக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது இதில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த தினேஷ் கார்த்திக் நேற்று நடந்த ஆட்டத்தின் போது சற்று அப்செட் ஆகிவிட்டார் என்று தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

sharma

- Advertisement -

கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்களை குவித்தது.அந்த அணியின் சபீர் ரகுமான் அதிகபட்சமாக 77 ரன்களை எடுத்திருந்தார்.

பின்னர் 167 ரன்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் முதலில் சாமர்த்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.இந்தியா அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடித்து விளாசினர்.பின்னர் அவர் அவுட்டாக இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு கடினமாகியது.

DK1

பின்னர் பெவிலியன் சென்ற ரோஹித் சர்மா, தினேஷ் கர்த்திக்கிடம் 7வது வரிசையில் களமிறங்க சொல்லியுள்ளார். ஏனெனில் கடைசி 4 ஓவர்களில் உங்கள் ஆட்டம் பயன்படும் என்வே நீங்கள் 7வது வரிசையில் சென்றால் தான் நாம் வெற்றிபெற்றுவிடுவோம் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.அதனால் தினேஷ் கார்த்திக் இறங்க வேண்டிய வரிசையில் விஜய் ஷங்கர் இரக்கிவிடப்பட்டார்.இதனால் தினேஷ் கார்த்திக்கு கொஞ்சம் மனவருத்தத்தில் இருந்தார், இருப்பினும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார் என்று பெருமைப்பட பேசியுள்ளார் ரோகித் சர்மா.

Advertisement