நீங்கள் என்னை விட்டு இவ்வாறு செய்தது தவறு – ஐ.சி.சி க்கு எதிராக தனது அதிருப்தியை வெளியிட்ட ரோஹித்

Rohith
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரும், துணை கேப்டனுமான ரோகித் சர்மா இந்திய அணிக்காக தனது சிறப்பான ரன் குவிப்பை பல ஆண்டுகளாக கொடுத்து வருகிறார். மேலும் மிடில் ஆர்டரில் இருந்து மாறி இவர் ஓப்பனிங் இறங்கியதில் இருந்து இவருடைய கிரிக்கெட் கரியர் வேறு லெவலுக்கு சென்றது என்றே கூறலாம்.

rohith

- Advertisement -

ஒருநாள் போட்டி, டி20 என அடித்து நொறுக்கிய இவருக்கு டெஸ்ட் போட்டிகளின் துவக்க வீரராக வாய்ப்பு கிடைத்ததால் டெஸ்ட் போட்டியிலும் தற்போது ரன்களை குவித்து வருகிறார். எந்த பார்மேட்டாக இருந்தாலும் ஏகப்பட்ட ரன்களை குவித்து வரும் இவர் தற்போது சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வவருகிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் போது காயமடைந்த ரோகித் சர்மா அந்த தொடரின் பாதியிலேயே விலகி தற்போது அதற்கான சிகிச்சையும், பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஐசிசி வெளியிட்ட பதிவில் எந்த பேட்ஸ்மேன் புல் ஷாட் ஆடுவதில் சிறந்தவர் என்று கேள்வியை எழுப்பி அதில் நான்கு புகைப்படங்களை பதிவிட்டுருந்தனர்.

அதில் ரிக்கி பாண்டிங், கோலி, கிப்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒருவரின் புகைப்படத்தை பதிவிட்டு இருந்த ஐ.சி.சி யின் பதிவை கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்களது பதிலை அந்த பதிவிற்கு அளித்து வந்த நிலையில் ரோகித் சர்மா தற்போது ஐசிசியின் அந்த பதிவிற்கு தனது பதிலை பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அதில் அவர் குறிப்பிட்டதாவது : இங்கே ஒருவரை தவறவிட்டு உள்ளதாக நான் நினைக்கிறேன். வீட்டிலிருந்து இதை செய்வது கஷ்டம் என நான் நினைக்கிறேன் என்று ரோகித் சர்மா பதிவிட்டுள்ளார். அதாவது இந்த புகைப்படங்களில் தன்னை தவற விட்டுள்ளதாக அவர் ஐசிஐசிஐ சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வீட்டிலிருந்து இந்த ஷாட்டை நான் ஆடிக் காண்பிக்க முடியாது என்றும் களத்தில் நான் எனது ஆட்டத்தின் மூலம் இதற்கு பதில் அளிக்கிறேன் என்பது போல இந்த பதிவை அவர்களுக்கு பதிலாக அளித்துள்ளார். மேலும் ரோகித் சர்மாவின் இந்த பதிலை கண்ட பலரும் அவரை பாராட்டி மேலும் இந்தப் பதிவினையும் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement