இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது.விராட்கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு ரோகித்சர்மா இந்த தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியை வீழ்த்தியதின் மூலம் நிடாஸ்கோப்பையின் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா தன்னுடைய ரசிகர் ஒருவருக்கு அளித்த வாக்குறுதியை மறக்காமல் நிறைவேற்றி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
முகமது நிலம் என்ற நபர் ரோகித்சர்மாவின் தீவிர ரசிகர்.இவரின் தந்தை கேன்சரால் பாதிக்கப்பட்டு இருந்தபோது திடீரென்று இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சென்று தந்தையை பார்த்துக்கொள்ள வேண்டிய சூழல்.
உடனே ஊருக்கு செல்ல கையில் பணமில்லாமல் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்து கொண்டிருந்த வேளையில் சுதீர் (சச்சினின் தீவிர ரசிகர்) மூலம் ரோகித்சர்மாவிற்கு விசயம் தெரியவர முகமது நிலத்திற்கு தன்னுடைய செலவில் இலங்கைக்கு உடனடியாக டிக்கெட் எடுத்து தந்து ஊருக்கு செல்லுமாறு கூறி பணமும் தந்ததோடு மட்டுமில்லாமல் மார்ச் மாதம் நடைபெறும் இலங்கை முத்தரப்பு தொடரில் விளையாட நான் இலங்கை வந்தால் நிச்சயமாக உன்னையும் உன் தந்தையையும் வீட்டிற்கு வந்து சந்திப்பேன் என்று வாக்குறுதி தந்துள்ளார்.
ரோகித்சர்மா தந்த வாக்குறிதியை மறக்காமல் கொழும்புவில் உள்ள தனது ரசிகரின் வீட்டிற்கு சென்று அவரையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து நலம்விசாரித்தார்.பின்னர் பேசிய ரோகித்சர்மா “நாங்கள் இன்று இவ்வளவுதூரம் வளர்ந்துள்ளோம் என்றால் அதற்கு ரசிகர்களாகிய இவர் போன்றோர் தான் காரணம். ஆரம்பகாலம் முதலே என்னை ஒரு ரசிகராக ஊக்கப்படுத்தியவர். நம்மை நேசிப்பவர்களுடைய கடினமான நேரங்களில் நாம் உடனிருப்பது அவசியம்.
இன்று நான் இங்கு வந்ததில் அவர்களின் குடும்பம் மகிழ்ச்சியடைந்ததை என்னால் உணரமுடிந்தது. அதுவே எனக்கு மகிழ்ச்சி” என்றார்.பின்னர் பேசிய ரோகித்சர்மாவின் தீவிர ரசிகர் முகமது நிலம் “இக்கட்டான சூழ்நிலையில் மிகப்பெரிய உதவியை செய்தவர்” இன்று அவர் எங்களது வீட்டிற்கு வந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. நான் ரோகித்சர்மாவின் ரசிகன் என்பதில் எனக்கு பெருமை என்றார்.
Looks like #TeamIndia Captain @ImRo45 is taking lessons in Sinhala!
Fun video out soon on https://t.co/Z3MPyesSeZ pic.twitter.com/r4134s8FaU
— BCCI (@BCCI) March 16, 2018