கிங் கோலியின் 2 வாழ்நாள் சாதனையை தூளாக்கிய ஹிட்மேன் ரோஹித்.. பாபர் அசாமின் உலக சாதனை சமன்

Rohit Virat Kohli
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை என்ற கணக்கில் இந்தியா ஒயிட் வாஷ் செய்து கோப்பையை வென்றது. குறிப்பாக பெங்களூருவில் ஜனவரி 17ஆம் தேதி நடைபெற்ற 3வது போட்டியில் இரட்டை சூப்பர் ஓவரில் இந்தியா போராடி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா 129*, ரிங்கு சிங் 69* ரன்கள் எடுத்த உதவியுடன் 213 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை ஆப்கானிஸ்தானும் குர்பாஸ் 50, இப்ராஹிம் ஜாட்ரான் 50, குல்பதின் 55* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் சரியாக 212 ரன்கள் எடுத்தது. அதனால் சமனில் முடிந்த போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க நடந்த சூப்பர் ஓவர் மீண்டும் டையில் முடிந்தது.

- Advertisement -

ரோஹித்தின் சாதனை:
அதைத் தொடர்ந்து நடந்த சூப்பர் ஓவரில் ரோகித் சர்மா அதிரடியுடன் இந்தியா நிர்ணயித்த 12 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் ரவி பிஸ்னோயிடம் 2 விக்கெட்களை இழந்தது. அந்த வகையில் கோப்பையை வென்ற இந்தியாவின் த்ரில் வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

முன்னதாக இந்த போட்டியில் அடித்த 129 ரன்களையும் சேர்த்து இந்தியாவின் கேப்டனாக ரோகித் சர்மா இதுவரை 1578 ரன்களை வைத்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் வாழ்நாள் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 1578*
2. விராட் கோலி : 1570
3. எம்எஸ் தோனி : 1112

- Advertisement -

அது மட்டுமல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வயதில் சதமடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையையும் உடைத்துள்ள அவர் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 36 வருடம் 272 நாட்கள், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2024*
2. விராட் கோலி : 33 வருடம் 307 நாட்கள், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2022
3. சூரியகுமார் யாதவ் : 33 வருடம் 91 நாட்கள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2023

இதையும் படிங்க: எவ்ளோ போராடினோம்.. கடைசில இப்படி நடந்ததில் கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு – ஆப்கனிஸ்தான் கேப்டன் வருத்தம்

இது போக ரோகித் சர்மா இதுவரை டி20 கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்துள்ளார். இந்த 5 சதங்களில் 3 சதங்களை அவர் கேப்டனாக பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த கேப்டன் என்ற பாகிஸ்தானின் பாபர் அசாம் உலக சாதனையையும் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். சமீபத்தில் பதவி விலகிய பாபர் அசாமும் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் கேப்டனாக 3 சதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement