ஷாஹீன் அப்ரிடியை பொளந்ததை மறக்காதீங்க.. இப்போ ரோஹித்திடம் அந்த பிரச்சனை இல்ல.. சஞ்சய் மஞ்ரேக்கர் ஓப்பன்டாக்

Sanjay Manjrekar 4
- Advertisement -

தென்னாபிரிக்க மண்ணில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை மழைக்கு மத்தியில் சூரியகுமார் யாதவ் தலைமையில் சமன் செய்த இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை கேஎல் ராகுல் தலைமையில் வென்றது. இதைத்தொடர்ந்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணி களமிறங்க உள்ளது.

அதில் 1992 முதல் இதுவரை வரலாற்றில் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற மோசமான சரித்திரத்தை மாற்றும் முனைப்புடன் இம்முறை இந்தியா களமிறங்க உள்ளது. இத்தொடரில் இந்தியா வெல்வதற்கு நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 2023 உலகக் கோப்பையில் வெளிப்படுத்திய அதே அட்டகாசமான செயல்பாடுகளை வெளிப்படுத்துவது அவசியமாகிறது.

- Advertisement -

முன்னேறிய ரோஹித்:
குறிப்பாக துவக்க வீரராக களமிறங்கும் ரோஹித் சர்மா ஆரம்பத்திலே நன்றாக விளையாடி நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பது கட்டாயமாகிறது. இருப்பினும் இத்தொடரில் தென்னாபிரிக்க அணியில் உள்ள இடது கை வேகப்பந்து வீச்சாளரான மார்க்கோ யான்சென் வலது கை பேட்ஸ்மேனான ரோகித்துக்கு சவாலை கொடுப்பார் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் சாகின் அப்ரிடியை அடித்து நொறுக்கியது போல் தற்போது இடது கை பவுலர்களிடம் ரோஹித் சர்மா தடுமாறும் கதை மாறிவிட்டதாக சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். எனவே இத்தொடரில் ரோஹித் அசத்துவார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நீங்கள் பேசும் இடது கை பவுலர்களுக்கு எதிராக ரோகித் சர்மா பலவீனத்தை கொண்டிருந்த காலங்கள் முடிந்து போனதாகும். இப்போது கொண்டிருக்கவில்லை. கடந்த 2 – 3 வருடங்களாக அவருக்கு அது பிரச்சனையாக இல்லை. சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் புதிய பந்தில் மிட்சேல் ஸ்டார்க்கிற்கு எதிராக அவர் கச்சிதமாக விளையாடினார். சொல்லப்போனால் ரோஹித் சர்மாவுக்கு எதிராக ஷாஹீன் அப்ரிடி ஆபத்தானவராக கருதப்பட்டது. அது ரோஹித் லைனை க்ராஸ் செய்து விளையாடிய காலமாகும்”

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 ஏலத்தின் மற்றொரு பரிதாபம்.. ரிங்கு சிங் பற்றி ரசிகர்கள் ஆதங்கம்.. காரணம் என்ன

“ஆனால் தற்போது முன்னேறியுள்ள அவர் சிறந்த டெஸ்ட் பிளேயராக உருவெடுத்துள்ளார். இப்போதெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் வெள்ளைக்கோட்டை பயன்படுத்திய ரன்கள் எடுக்கிறார். குறிப்பாக 2021 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் துவக்க வீரராக களமிறங்கி சதமடித்த அவர் அத்தொடரில் இந்தியாவுக்கு அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்தார். அத்தொடரில் களத்தில் அதிக நேரம் விளையாடிய அவர் 2023 உலகக் கோப்பையில் அதற்கு நேர்மாறாக குறைந்த நேரத்தில் அதிரடியாக விளையாடினார்” என்று கூறினார்.

Advertisement