ஐபிஎல் 2024 ஏலத்தின் மற்றொரு பரிதாபம்.. ரிங்கு சிங் பற்றி ரசிகர்கள் ஆதங்கம்.. காரணம் என்ன

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற்று முடிந்தது. அதில் 2023 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் 20.50 கோடிக்கு ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டு ஐபிஎல் வரலாற்றின் ஏலத்தில் 20 கோடிகளுக்காக வாங்கப்பட்ட முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரை மிஞ்சிய மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் ஸ்டார்க் 24.75 கோடிகளுக்கு கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டார். அதனால் ஐபிஎல் வரலாற்றின் ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போன வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்தது இந்திய ரசிகர்களுக்கு ஆதங்கமாகவும் ஏமாற்றமாகவும் அமைந்தது.

- Advertisement -

ரசிகர்கள் ஆதங்கம்:
ஏனெனில் 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்டது முதல் இன்று வரை ஒரே அணிக்காக விளையாடி அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ள விராட் கோலி 15 கோடிக்காக விஸ்வாசத்துடன் பெங்களூருவுக்கு விளையாடுகிறார். அதே போல 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள ஜாம்பவான் எம்எஸ் தோனி 12 கோடிக்கும் ரோஹித் சர்மா 16 கோடிக்கும் தங்களுடைய அணிக்காக விளையாடி வருகிறார்கள்.

ஆனால் நாட்டுக்காக சமீபத்திய வருடங்களாக ஐபிஎல் தொடரை குப்பை போல் புறக்கணித்து 100 ஐபிஎல் போட்டிகளில் கூட விளையாடிய அனுபவமில்லாத இந்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இவ்வளவு பெரிய தொகை கொடுக்கப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதை விட தற்போது இந்திய அணியில் லேட்டஸ்டாக அறிமுகமாகி அசத்தி வரும் ரிங்கு சிங் கொல்கத்தா அணியில் தக்கவைக்கப்பட்டதால் 2024 சீசனில் வெறும் 55 லட்சம் என்ற அடிமாட்டு விலைக்கு விளையாட உள்ளது ரசிகர்களிடம் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஆம் 2018இல் 80 லட்சதுக்கு கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டு பெரும்பாலும் பெஞ்சில் அமர்ந்து வந்த அவரின் சம்பளம் 2021இல் 55 குறைக்கப்பட்டது. அதை தொடர்ந்து 2022 சீசனில் முதல் முறையாக அசத்திய காரணத்தால் 2023இல் முழுமையான வாய்ப்பு பெற்ற அவர் 14 போட்டிகளில் 474 ரன்கள் குவித்து இன்று இந்தியாவுக்காக அறிமுகமாகி அசத்தி வருகிறார். குறிப்பாக குஜராத்துக்கு எதிரான கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்ததே ரிங்கு சிங் இந்தியாவுக்கு விளையாடுவதற்கான வாய்ப்பை கொடுத்தது.

இதையும் படிங்க: 2012 மறுமலர்ச்சியின் அடுத்த வரவு.. அம்பயர்களுக்கு டஃப் கொடுக்க ப் போகும் எலக்ட்ரா ஸ்டம்ப்கள்

மேலும் அந்த 55 லட்சத்திலும் 50 லட்சத்தை தனது மாநிலத்தில் இளம் வீரர்களுக்கு ஹாஸ்டல் கட்டுவதற்கு ரிங்கு தனமாக கொடுத்தது வேறு கதை. ஆனால் அவரிடம் 5 சிக்சர்கள் வாரி வழங்கிய யாஷ் தயாள் இதே ஏலத்தில் குஜராத் அணியால் கழற்றி விடப்பட்டதால் பெங்களூரு அணிக்காக 5 கோடிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது தான் ரசிகர்களை ஆதங்கப்பட வைக்கிறது. அந்த வகையில் ஐபிஎல் ஏலத்தில் தக்க வைக்கப்பட்ட வீரர்களுக்கு நியாயமான சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement