- Advertisement -
இந்திய கிரிக்கெட்

34/3 என இந்தியா போராட்டம்.. வங்கதேசத்திடம் பெட்டிப்பாம்பாக அடங்கும் ரோஹித்.. பரிதாப புள்ளிவிவரம்

இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இந்திய அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் 2 ஸ்பின்னர்கள் விளையாடுவார்கள் என்ற வித்தியாசமான முடிவை கேப்டன் ரோஹித் சர்மா எடுத்தார். குறிப்பாக ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகும் நோக்கத்திலும் சென்னை மைதானம் ஆரம்பத்தில் வேகத்துக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் ரோஹித் சர்மா இந்த புதிய முடிவை எடுத்தார்.

- Advertisement -

பெட்டிப் பாம்பாக ரோஹித்:

இந்திய அணியில் ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டும் விளையாடுவதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 6 ரன்களில் ஹசன் மஹ்முத் வேகத்தில் அவுட்டானார். இதையும் சேர்த்து ரோகித் சர்மா தன்னுடைய டெஸ்ட் கேரியரில் வங்கதேசத்துக்கு எதிராக வெறும் 39 ரன்களை 9.75 என்ற படுமோசமான சராசரியில் எடுத்துள்ளார்.

குறிப்பாக 6, 6, 21, 6 என சொற்ப ரன்களில் அவுட்டான அவர் வங்கதேசத்துக்கு எதிராக ஒருமுறை கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் அரை சதமடித்ததில்லை. அந்த வகையில் ஹிட்மேன் என்றழைக்கப்படும் ரோஹித் சர்மா வங்கதேசத்திடம் மட்டும் இப்படி பெட்டிப்பாம்பாக அடங்குவது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்ததாக வந்த சுப்மன் கில் அதை விட மோசமாக பேட்டிங் மஹ்முத் வேகத்தில் டக் அவுட்டானார்.

- Advertisement -

தடுமாறும் இந்தியா:

போதாக்குறைக்கு அதற்கடுத்ததாக வந்த நம்பிக்கை நாயகன் விராட் கோலியும் அவரிடமே 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அதனால் 34-3 என இந்தியா ஆரம்பத்திலேயே சுமாரான துவக்கத்தை பெற்று தடுமாறியது. அப்போது சுமார் 2 வருடங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து இந்தியாவை காப்பாற்ற நிதானமாக பேட்டிங் செய்யத் துவங்கினார்.

இதையும் படிங்க: ஷ்ரேயாஸ் ஐயரின் டெஸ்ட் கரியரை முடித்துவிட்ட அஜித் அகார்கர்.. என்ன விடயம் தெரியுமா? – விவரம் இதோ

அதனால் முதல் நாள் உணவு இடைவெளியில் இந்தியா 88-3 ரன்கள் எடுத்து போராடி வருகிறது. இந்திய அணிக்கு களத்தில் ஜெய்ஸ்வால் 37*, ரிஷப் பண்ட் 33 ரன்களுடன் உள்ளனர். இந்த சரிவிலிருந்து மீண்டு இந்திய அணி 300 ரன்கள் அடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -