இதெல்லாம் பத்தாது.. நானும் அந்த தப்பை செஞ்சுட்டேன்.. வெற்றிக்கு பின் அணி வீரர்கள் மீது ரோஹித் அதிருப்தி பேட்டி

Rohit Sharma 55
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 29ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 50 ஓவர்களில் சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி போராடி 229/9 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 87, சூரியகுமார் யாதவ் 49 கேஎல் ராகுல் 39 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 230 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு ஜானி பேர்ஸ்டோ 14, டேவிட் மாலன் 16, ஜோ ரூட் 0, பென் ஸ்டோக்ஸ் 0 ரன்களில் பும்ரா மற்றும் ஷமி வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ரோஹித் கருத்து:
அதனால் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்த இங்கிலாந்துக்கு மிடில் ஆர்டரில் ஜோஸ் பட்லர் 10, மொய்ன் அலி 15, லியாம் லிவிங்ஸ்டன் 27 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் 34.5 ஓவரிலேயே இங்கிலாந்தை 129 ரன்களுக்கு சுருட்டி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக பந்து வீச்சில் மிரட்டலாக செயல்பட்ட முகமது ஷமி 4, ஜஸ்பிரித் பும்ரா 3, குல்தீப் யாதவ் 3 விக்கெட்களை சாய்த்தனர்.

அப்படி 6 போட்டிகளிலும் 6 வெற்றிகளை பெற்ற இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியதுடன் செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் பேட்டிங்கில் தாம் உட்பட அனைத்து பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடி 30 ரன்கள் குறைவாக அடித்ததாக கேப்டன் ரோஹித் சர்மா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் அந்த குறை அளவுக்கு பவுலர்கள் வெற்றி பெற வைத்ததாக தெரிவிக்கும் அவர்கள் அடுத்த முறை முதலில் பேட்டிங் செய்தால் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்று பேட்ஸ்மேன்களை விமர்சித்து பேசியது பின்வருமாறு. “இந்த போட்டியில் எங்களுடைய அணி தங்களுடைய கேரக்டரை காட்டினர். சரியான நேரத்தில் எங்களுடைய அனுபவமிக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வைத்தனர். இப்போட்டியில் பேட்டிங் செய்த போது இங்கிலாந்து சவாலை கொடுத்தனர்”

இதையும் படிங்க: 100இல் 100.. அனல் தெறித்த பவுலிங்.. இங்கிலாந்தை 10 வருடங்கள் கழித்து வீழ்த்திய இந்தியா.. மாஸ் வெற்றி

“குறிப்பாக இந்த பிட்ச்சில் நாங்கள் குறிப்பிட்ட ஸ்கோரை அடிக்க விரும்பினோம். ஆனாலும் பேட்டிங்கில் நாங்கள் அசத்தவில்லை. ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது சரியல்ல. நான் உட்பட சிலர் தங்களுடைய விக்கெட்டை பரிசளித்தோம். அதனால் நாங்கள் 30 ரன்கள் குறைவாக அடித்தோம். அந்த சூழ்நிலையில் பந்து வீச்சில் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை எடுப்பது அவசியம். அதை அறிந்த எங்களுடைய பவுலர்கள் மைதானத்தில் இருந்த சூழ்நிலைகளை சிறப்பாக பயன்படுத்தி நல்ல லென்த்தில் வீசினார்கள். அந்த வகையில் எங்களுடைய பவுலிங் நல்ல சமநிலையுடன் இருக்கிறது. இருப்பினும் பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement