IND vs AFG : பயம்ன்னா என்னனு தெரியாத பிளேயர்ஸ் இருக்காங்க.. ஆப்கனை வீழ்த்தய பின் ரோஹித் சர்மா பேட்டி

Rohit Sharma 3
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 11ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 2 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் தடுமாற்றமாக செயல்பட்டு 272/8 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஷாகிதி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 80 ரன்களும் ஓமர்சாய் 62 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா 4 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 273 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

பயமற்ற அணி:
இருப்பினும் மறுபுறம் தடுமாற்றமாக செயல்பட்ட இஷான் கிஷன் 151 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் 47 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து வெளுத்து வாங்கிய ரோகித் சர்மா 16 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து சில உலக சாதனைகளை படைத்து ஆட்டமிழந்தார். இறுதியில் விராட் கோலி 55* ஸ்ரேயாஸ் ஐயர் 25* ரன்கள் எடுத்ததால் 35 ஓவரிலேயே வென்ற இந்தியா புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறிய நிலையில் ஆப்கானிஸ்தான் சார்பில் ரசித் கான் 2 விக்கெட்கள் எடுத்தும் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதை சமாளித்து பயமின்றி விளையாடும் அளவுக்கு விராட் கோலி, ராகுல் போன்ற தரமான வீரர்களுடன் இந்தியா வலுவாக இருப்பதாக ஆட்டநாயகன் விருதை வென்ற கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். பாகிஸ்தான் போட்டிக்கு முன் இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த நல்ல வெற்றியால் இத்தொடரின் துவக்கத்தில் எங்களுக்கு நல்ல வேகம் கிடைத்துள்ளது. இது அழுத்தத்தை உட்வாங்கி களத்தில் சரியான முடிவுகளை எடுப்பதைப் பொறுத்ததாகும்”

- Advertisement -

“இந்த தொடருக்கு முன்பாகவே நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடி தான் வந்துள்ளோம். மேலும் எங்களிடம் நல்ல திறமைகள் கொண்ட வீரர்கள் நிறைந்திருக்கின்றனர். இது போன்ற திறமைகள் ஒன்றாக சேர்ந்து வரும் போது உங்களுடைய அணியம் நல்ல இடத்தில் இருக்கும். குறிப்பாக கடந்த போட்டியை போல எங்களது வீரர்கள் அழுத்தத்தை உள்வாங்கி பயமற்ற கிரிக்கெட்டை விளையாடும் திறமையை கொண்டுள்ளனர்”

இதையும் படிங்க: IND vs AFG : 90 பந்துகள் மீதம்.. ரோஹித் அதிரடி.. ஆப்கனை வீழ்த்திய இந்தியா.. டேபிளில் பாகிஸ்தானை முந்தியது எப்படி?

“எனவே அடுத்ததாக நடைபெறும் பாகிஸ்தான் போட்டியை பற்றிய வெளிப்புற பேச்சுகளால் நாங்கள் கவலைப்படவில்லை. வெளிப்புறத்தில் நடப்பதை எங்களால் கட்டுப்படுத்தவும் முடியாது. எனவே எங்களால் கட்டுப்படுத்தக்கூடிய அணியின் கலவை, பிட்ச் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். அத்துடன் வீரர்களாக ஒன்றிணைந்து அப்போட்டியில் எப்படி சிறப்பாக செயல்படலாம் என்பதில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம்” என்று கூறினார்.

Advertisement