உங்க சர்வீஸ் போதும், விராட் கோலியிடம் தோனி ஒப்படைத்த மாதிரி நீங்களும் செய்ங்க – ரோஹித்துக்கு அஜய் ஜடேஜா அட்வைஸ்

Ajay-Jadeja
- Advertisement -

2023 புத்தாண்டில் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்திய கிரிக்கெட் அணி செயல்பட்டு வருகிறது. அத்துடன் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான சீனியர்கள் அடங்கிய முதன்மை அணி விளையாடுகிறது.

INDia Hardik pandya

- Advertisement -

இப்படி ஒவ்வொரு தொடருக்கும் வெவ்வேறு கேப்டன்கள் செயல்படுவது புதிய முழு நேராக கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்றது முதல் இந்திய கிரிக்கெட்டில் அரங்கேறி வருவது பெரிய பின்னடைவை கொடுக்கிறது. ஏனெனில் ஒரு நிலையான கேப்டன் தலைமையில் அனைத்து வீரர்களும் இணைந்து விளையாடி செட்டிலானால் தான் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரை வெல்ல முடியும். ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலிருந்தே காயம் அல்லது பணிச்சுமை என்ற பெயரில் பெரும்பாலும் ஓய்வெடுக்கும் ரோகித் சர்மாவால் வரலாற்றில் கடந்த வருடம் முதல் முறையாக 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய அவலம் இந்தியாவுக்கு ஏற்பட்டது.

சர்வீஸ் போதும்:
அதனால் இருதரப்பு தொடர்களை வென்ற இந்தியா வழக்கம் போல ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியையே சந்தித்தது. மேலும் ஃபிட்டாக இருப்பதற்கு எடுத்துக்காட்டாக இல்லாமல் இருக்கும் ரோஹித் சர்மாவை பார்த்து இதர வீரர்களும் சுமாரான உடல் தகுதியை கடைப்பிடிப்பதால் இப்போதெல்லாம் இந்திய அணியில் அடிக்கடி காயங்கள் ஏற்படுவதும் வழக்கமாகி விட்டது. அதனால் இதற்கு 2017 – 2021 வரை பிட்டாக தொடர்ந்து அணியை வழி நடத்திய விராட் கோலி பரவாயில்லை என்ற கருத்துகளும் காணப்படுகிறது.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே நிரந்தர கேப்டனாக மறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா ஒருநாள் கிரிக்கெட்டிலும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே தாம் இல்லாமலேயே இந்திய அணி வெற்றி காண்பதை புரிந்து கொண்டு 2017இல் விராட் கோலியிடம் தோனி தன்னுடைய கேப்டன்ஷிப் பொறுப்பை ஒப்படைத்தது போல் ரோகித் சர்மா தம்முடைய கேப்டன்ஷிப் பொறுப்பை ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இப்போதைய இந்திய அணியை யார் நடத்துகிறார் என்பது எனக்கு தெரியவில்லை. எப்போதுமே அரசன், தலைவன், கேப்டன், பயிற்சியாளர் உட்பட யாராக இருந்தாலும் அது ஒருவராக மட்டும் இருக்க வேண்டும். ஆனால் இங்கே நிறைய கேப்டன்கள் இருப்பதால் வீரர்கள் யாரை பின் தொடர்வார்கள். எந்த கேப்டனின் பேச்சை அவர்கள் கேட்பார்கள். தற்போதைய நிலைமையில் ரோகித் சர்மா நம்முடைய கேப்டனாக உள்ளார். புள்ளி விவரங்களும் அவரை சிறந்த கேப்டனாக காட்டுகிறது. ஆனால் இங்கே எந்த அரசரும் காத்திருக்கவில்லை. எல்லாம் மன்னர்களும் தங்கள் இடத்தை பிடிக்க காத்திருக்கிறார்கள்”

Ajay

“எனவே அவர்கள் காத்திருக்கும் போது அரசன் தன்னுடைய உரிமையை வழங்க வேண்டும். எடுத்துக்காட்டாக எம்எஸ் தோனி விராட் கோலிக்கு தன்னுடைய பதவியை வழங்கியது போல. அந்த முடிவை தேர்வு குழுவினரோ அல்லது வாரியமோ எடுக்கவில்லை. தோனி தான் எனக்கு அடுத்து நீங்கள் தான் இந்த பொறுப்பில் இருக்க வேண்டும் என்று விராட் கோலியிடம் கொடுத்தார். அதே போல் தான் ரோகித் சர்மாவும் செயல்பட வேண்டும்”

இதையும் படிங்க: IND vs SL : முதல் ஒன்டே நடைபெறும் கௌகாத்தி மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

“அந்த வகையில் உம்ரான் மாலிக்கை சிறப்பாக பயன்படுத்தியது உட்பட பாண்டியா கேப்டனாக நிறைவற்றை சரியாக செய்கிறார். மேலும் கடந்த வாரம் கேப்டனாக இல்லாத அவர் இந்த வாரம் கேப்டனாக இருந்து அடுத்த வாரம் மீண்டும் கேப்டனாக இல்லாமல் போனால் அதற்காக மெதுவாக ஓடக்கூடாது. ஒரு விளையாட்டு வீரராக நீங்கள் எப்போதும் உங்களது அணியை கீழே விடாமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். சாம்பியன் வீரரான நீங்கள் தலைமை பொறுப்பை ஏற்காவிட்டாலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement