
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வழியாக தங்களது முதல் வெற்றியைப் பெற்றது. முன்னதாக தோனிக்கு முன்பாகவே மும்பைக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மா வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அதன் காரணமாக இந்தியாவின் கேப்டனாகவும் முன்னேறிய அவர் கடந்த 2 ஐசிசி கோப்பைகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
அப்படிப்பட்ட அவர் ஐபிஎல் தொடரில் சமீபத்திய வருடங்களில் பெரிய ரன்கள் குவிக்க தடுமாறி வருகிறார். அவருடைய தலைமையில் 2021, 2022, 2023 வருடங்களில் மும்பை மோசமாக விளையாடி வெளியேறியது. அதனால் 5 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் என்பதையும் மறந்த மும்பை நிர்வாகம் ரோகித்தை கழற்றி விட்டு குஜராத்திடமிருந்து பாண்டியாவை வலுக்கட்டாயமாக வாங்கி தங்களது கேப்டனாக நியமித்தது.
அந்த முடிவுக்கு மும்பை ரசிகர்களே எதிர்ப்பு தெரிவித்து பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்டனர். மறுபுறம் கேப்டன்ஷிப் பொறுப்பு கைக்கு வந்ததும் ரோகித் சர்மாவை பௌண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு பாண்டியா அவமானப்படுத்தியதும் மும்பை ரசிகர்களை கோபமடைய வைத்தது. அதன் காரணமாக ரோஹித் மும்பையை விட்டு வெளியேற வேண்டும் என்று நிறைய ரசிகர்களும் ராயுடு போன்ற சில முன்னாள் வீரர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
அதற்கு எதிர்ப்புக்கு மத்தியில் பாண்டியா தலைமையில் சுமாராக விளையாடிய மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது. அதன் பின் ரோஹித் தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்ல பாண்டியா உதவினார். அதனால் அவரை மும்பை கழற்றி விடாமல் இந்த வருடமும் தக்க வைத்தது.
அந்த சூழ்நிலையில் இந்த வருடம் ரோஹித் சர்மாவை முதல் போட்டியிலிருந்தே மும்பை நிர்வாகம் இம்பேக்ட் வீரராக பயன்படுத்துகிறது. குறிப்பாக ரோஹித் சர்மா முழுமையாக விளையாட விரும்பினாலும் ஃபிட்டாக இல்லை என்று கருதும் மும்பை நிர்வாகம் அவரை இம்பேக்ட் வீரராக பேட்டிங்கில் மட்டும் பயன்படுத்திவிட்டு மீதி நேரங்களில் பெஞ்சில் அமர வைத்து அவமானப்படுத்தி வருகிறது. அதன் உச்சமாக நேற்று கொல்கத்தாவுக்கு எதிரானப் போட்டியில் ரோஹித் சர்மாவை கூல்ட்ரிங்க்ஸ் தூக்க செல்லுமாறு மும்பை நிர்வாகம் அவமானப்படுத்தியது.
அதை ஏற்றுப் பணிவுடன் கூல் டிட்ரிங்ஸ் தூக்கிச் சென்ற ரோகித் தண்ணீரைக் கொடுத்தார். அவரிடம் மற்ற மும்பை வீரர்கள் யாருமே போட்டி சம்பந்தமான விஷயங்களைப் பேசவில்லை. அதனால் ரோஹித் தனியாக நின்று விட்டு வந்தார். இதை பார்க்கும் ரசிகர்கள் 5 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற ரோகித் சர்மாவுக்கு மும்பை அணியில் அவமானங்கள் தொடர்வதாக அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவுக்காக அந்த உலகக் கோப்பை வெல்வதே அடுத்த டார்கெட்.. விராட் கோலி அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி
ஏனெனில் சமீபத்தில் 2 ஐசிசி கோப்பைகளை வென்ற ரோகித் இப்போது வெளியே வந்தால் கூட பஞ்சாப், டெல்லி போன்ற அணிகள் கேப்டன்ஷிப் கொடுத்து வரவேற்க தயாராக உள்ளன. இது போக இம்முறை ரோஹித் 0, 8, 13 என பேட்டிங்கில் பெரிய ரன்கள் குவிக்காமல் தடுமாறி வருகிறார். அதனால் ரோஹித் சர்மாவிடம் நேற்றைய போட்டியின் முடிவில் மும்பை அணியின் உரிமையாளர் நீதா அம்பானி கொஞ்சம் கோபமாக பேசியது குறிப்பிடத்தக்கது.