IPL 2023 : 5 ஆண்டுகளாக ரோஹித் சர்மாவை தொடரும் சோகம் – இந்த ஆண்டு ஆரம்பத்திலும் சொதப்பல்

Rohith
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியானது இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டூப்ளிசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது.

Suryakumar yadhav MI vs RCB.jpeg

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் களமிறங்கிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 10 பந்துகளை சந்தித்து ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு கடந்த ஐந்து ஆண்டுகளாக அவரை துரத்தும் சோகமானது தற்போது ஆறாவது ஆண்டும் ஆரம்பித்துள்ளது என சில கருத்து முடிவுகள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன.

rohith-1

அந்த வகையில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதலிலே ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் முற்றிலும் மோசமாக இருப்பதாகவும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவதால் ரோஹித் சர்மா குறித்து எந்த ஒரு விமர்சனமும் இல்லாமல் வருகிறது என கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

- Advertisement -

ஏனெனில் கடந்த 2018-ஆம் ஆண்டு அவரது சராசரி 23 மட்டுமே, 2019-ஆம் ஆண்டு அவரது சராசரி 28 மட்டுமே, 2020-ஆம் ஆண்டு அவரது சராசரி 27 மட்டுமே, 2021 ஆம் ஆண்டு அவரது சராசரி 29 மட்டுமே, கடந்த 2022-ஆம் ஆண்டில் அவரது சராசரி 19 ரன்கள் மட்டுமே இருக்கிறது. அதோடு அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 135 தாண்டவில்லை.

இதையும் படிங்க : IPL 2023 : குஜராத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாரா ஸ்டீவ் ஸ்மித் – அவரே அளித்த பதில் இதோ

இதன் காரணமாக ரோஹித் சர்மா கடந்த ஐந்து சீசன்களாகவே சிரமப்பட்டு வருகிறார் என்றும் அதனை தொடர்ந்து இந்த முதல் போட்டியிலும் அவர் 10 பந்துகளை சந்தித்து ஒரு ரன் மட்டுமே எடுத்ததால் மோசமான துவக்கத்தை பெற்றிருக்கிறார் என்றும் புள்ளி விவரங்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement