IPL 2023 : குஜராத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாரா ஸ்டீவ் ஸ்மித் – அவரே அளித்த பதில் இதோ

Steve Smith
- Advertisement -

அகமதாபாத் நாரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய 16-வது ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி மீண்டும் ஒருமுறை சென்னை அணியை வீழ்த்தி தங்களது வெற்றிகரமான பயணத்தை துவங்கியுள்ளது.

Kane-Williamson

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது குஜராத் அணிக்காக விளையாடிய கேன் வில்லியம்சன் சென்னை வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அடித்த சிக்சரை தடுக்க முயன்று பவுண்டரி லைனில் தவறி விழுந்து காலில் காயமடைந்தார்.

பின்னர் பாதியிலேயே போட்டியிலிருந்து வெளியேறிய அவருக்கு பதிலாக தமிழக வீரர் சாய் சுதர்சன் இம்பேக்ட் பிளேயராக களம் இறக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் போட்டி முடிந்து வில்லியம்சன் காலில் ஏற்பட்ட காயத்திற்கு பரிசோதனை மேற்கொள்கையில் காலில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

Smith

இந்நிலையில் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக மாற்றுவீரராக யார் வருவார்கள் என்று கேள்வி எழுந்த வேளையில் வில்லியம்சனுக்கு மாற்று வீரராக ஸ்டீவ் ஸ்மித் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என வதந்திகள் பரவியது. இந்நிலையில் இப்படி சமூக வலைதளத்தில் பரவி வரும் செய்திக்கு பதில் அளிக்கும் விதமாக ஸ்டீவ் ஸ்மித் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது :

- Advertisement -

நான் ஐபிஎல் கிரிக்கெட்க்கான ஏலத்தில் நான் பதிவு செய்யவில்லை. அதனால் மாற்று வீரராக என்னை ஒப்பந்தம் செய்ய வாய்ப்புகளே இல்லை என தெளிவாக சொல்லியுள்ளார். ஏனெனில் பொதுவாக ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ள வீரர்களையே மாற்று வீரர்களாக அணி நிர்வாகிகள் ஒப்பந்தம் செய்ய முடியும்.

இதையும் படிங்க : என் வாழ்வில் மறக்கமுடியாத அந்த 20 நிமிடங்கள் இதுதான். 12 ஆண்டுகால நினைவை பகிர்ந்த – தோனி

ஆனால் இந்த ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்யப்படாத ஸ்டீவ் ஸ்மித் வர்ணனையாளராக மட்டுமே செயல்படுவார் என்றும் அவர் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement