என் வாழ்வில் மறக்கமுடியாத அந்த 20 நிமிடங்கள் இதுதான். 12 ஆண்டுகால நினைவை பகிர்ந்த – தோனி

Kohli dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2011-ஆம் ஆண்டு இதே நாளில் தான் 50 ஓவர் உலகக் கோப்பையை மும்பை வான்கடே மைதானத்தில் கைப்பற்றி வரலாறு படைத்தது. கபில் தேவிற்கு அடுத்து எந்த ஒரு வீரராலும் உலகக் கோப்பையை கைப்பற்ற முடியாத வேளையில் தோனி தலைமையிலான இந்திய அணி 2011-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக வெற்றி பெற்று கோப்பையை கையில் ஏந்திய தருணத்தை இன்றளவும் யாராலும் மறக்க முடியாது.

- Advertisement -

அந்த அளவிற்கு ஒரு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக வழங்கிய பங்களிப்பிற்காக அவருக்காக இந்த கோப்பையை கைப்பற்றியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கிய இந்திய அணியானது அந்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இறுதியில் கோப்பையை வென்று அவருக்கு பரிசளித்தது.

இந்த போட்டியில் முக்கியமான கட்டத்தில் இந்திய அணி 275 ரன்களை சேசிங் செய்யும்போது தோனி களம் இறங்கி தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

2011-final

வெற்றிக்கு நான்கு ரன்கள் தேவை என்ற நிலையில் அவர் அடித்த சிக்சரை இன்றளவும் நம்மால் மறக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற தருணம் குறித்து பேசியுள்ள முன்னாள் கேப்டன் தோனி கூறுகையில் :

- Advertisement -

உலக கோப்பையை வென்ற அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது இன்றளவும் அந்த தருணம் இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. இலக்கு இன்னும் சிறிது தூரத்தில் தான் இருக்கிறது போட்டியை நாம் வெற்றிகரமாக முடிக்க போகிறோம் என்று நினைத்துக் கொண்டே விளையாடினேன். கடைசி 20 நிமிடங்கள் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் தேசிய கீதத்தை பாட ஆரம்பித்து விட்டனர்.

இதையும் படிங்க : IPL 2023 : இருக்கும் ஃபார்முக்கு இந்த சீசனில் அவர் நிச்சயமா 600 ரன்கள் அடிப்பாரு – இளம் இந்திய வீரரை பாராட்டும் பார்த்திவ் படேல்

20 நிமிடங்கள் ரசிகர்கள் தேசிய கீதத்தை பாடிக்கொண்டே இருந்தனர். அந்த 20 நிமிடங்கள் தான் என்னுள் இனம் புரியாத மகிழ்ச்சியை தந்தது. இன்றளவும் அந்த 20 நிமிடங்கள் என் நினைவில் உள்ளது என தோனி பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement