இங்கிலாந்து அணிக்கெதிரான டாஸிற்கு பிறகு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரோஹித் சர்மா – பிளேயிங் லெவன் இதோ

Rohit-Sharma
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்புக்கு மத்தியில் இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 29-ஆவது லீக் போட்டியானது இன்று லக்னோ நகரில் சற்று முன்னர் துவங்கியது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காத அணி என்கிற பெருமையை பெற இந்திய அணியும், இந்த போட்டியிலாவது வெற்றி பெற்று தொடர் தோல்விகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்புடன் இங்கிலாந்து அணியும் விளையாட இருப்பதினால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

அதன்படி சற்று முன்னர் நடைபெற்ற டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த தொடர் முழுவதுமே இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்து சேசிங்கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று வந்துள்ளது.

இந்நிலையில் இம்முறை இந்த தொடரில் முதல்முறையாக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் இந்த போட்டியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை கடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அதே அணி தான் இன்றைய போட்டியிலும் விளையாடுகிறது என்று யாரும் எதிர்பாராத தகவலை சர்ப்ரைஸாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அதன்படி இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : நாசர் ஹுசைன் பணத்தை வாங்கிட்டு விராட் கோலி தப்பு சொன்னாரு.. மீண்டும் விமர்சித்த ஹர்பஜன் சிங்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) சூரியகுமார் யாதவ், 7) ரவீந்திர ஜடேஜா, 8) குல்தீப் யாதவ், 9) முகமது ஷமி, 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement