IND vs ENG : விராட் கோலி இந்த மேட்ச்ல ஆடல. 3 ஆவது இடத்துல ஆடப்போறது இவர்தான் – டாசுக்கு பிறகு ரோஹித் அறிவிப்பு

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அண்மையில் நடைபெற்ற முடிந்தது. அந்த தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது லண்டன் கென்னிங்டன் மைதானத்தில் இன்று துவங்கியுள்ளது. ஏற்கனவே டி20 தொடரை கைப்பற்றியுள்ளதால் இந்த ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் நோக்கில் ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி களமிறங்கி உள்ளது.

INDvsENG

- Advertisement -

அதேவேளையில் டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பழித்திருக்கும் விதமாக இங்கிலாந்து அணியும் இம்முறை பலமாக ஒருநாள் போட்டிக்கு திரும்பியுள்ளதால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்களான ஜோ ரூட், பேர்ஸ்டோ மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு வலுவையும் சேர்த்துள்ளது. இந்நிலையில் இந்த முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னர் நேற்று பயிற்சி போட்டியில் ஈடுபடாத விராட் கோலிக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியது.

Shreyas Iyer

அதோடு காயத்தின் தீவிரத்தின் தன்மையை பொறுத்து தான் அவர் இன்றைய முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்று தெரியும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த முதல் ஒருநாள் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்துவிட்டு அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசினார்.

- Advertisement -

அப்போது விராட் கோலி இந்த போட்டியில் விளையாடும் அளவிற்கு பிட்டாக இல்லை என்பதனால் இன்றைய போட்டியில் கோலிக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் 3 ஆவது இடத்தில் விளையாடுவார் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்த முதலாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : விராட் கோலி எங்க டீம்ல இல்லையேனு ஆதங்கப்படுகிறோம், நீங்க விமர்சிக்கிறீங்களே – இந்தியர்களுக்கு இங்கி வீரர் கோரிக்கை

1) ரோஹித் சர்மா, 2) ஷிகார் தவன், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) சூரியகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஜஸ்ப்ரீத் பும்ரா, 9) முகமது ஷமி, 10) பிரசித் கிருஷ்ணா, 11) யுஸ்வேந்திர சாஹல்

Advertisement