இதனால் தான் அஷ்வினை உலகின் மிகச்சிறந்த பவுலர் என்று சொல்கிறேன் – ரோஹித் சர்மா கொடுத்த விளக்கம்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரு இன்னிங்ஸ்களிலும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதன் காரணமாக நல்ல ரன் குவிப்பை வழங்கியது. இறுதியில் 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

INDvsSL cup

- Advertisement -

ஆனால் இலங்கை அணியால் 208 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக 238 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. அது மட்டுமின்றி 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. போட்டியின் ஆட்ட நாயகனாக ஷ்ரேயாஸ் ஐயரும், தொடர் நாயகனாக ரிஷப் பண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். மேலும் அஷ்வினை மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என்று அழைக்க என்ன காரணம் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ashwin 1

என்னை பொறுத்தவரை அஷ்வின் எப்போதுமே பெஸ்ட் பவுலர் தான். ஏனெனில் இந்திய அணிக்கு எப்போதெல்லாம் விக்கெட் தேவையோ அப்போதெல்லாம் இவரின் கையில் பந்தினை நம்பி கொடுக்கலாம். அதே போன்று ஒவ்வொரு முறை தான் விளையாடும் போதும் மேட்ச் வின்னிங் பர்பாமன்ஸ்சை அஸ்வின் வழங்கி வருகிறார்.

- Advertisement -

என்னை பொருத்தவரை இந்திய கிரிக்கெட்டில் நிச்சயம் இவர் ஒரு லெஜன்ட் தான். எப்போது இவரின் கையில் பந்தை கொடுத்தாலும் நமக்கு இவர் விக்கெட்டை வீழ்த்தி கொடுப்பார். நமது சொந்த மண்ணில் பகலிரவு போட்டியில் விளையாடும் போது மைதானங்களை கணித்து அதற்கு ஏற்றவாறு பந்து வீசுவது என்பது சற்று சவாலான விடயம்.

இதையும் படிங்க : தோனியை விட இவர்தான் கூலானவர்! ரொம்ப கூலா கேப்டன்சி பண்றாரு – இர்பான் பதான் பாராட்டு

ஆனாலும் அஷ்வின் வெகுவிரைவாக மைதானத்தில் தன்மையை அறிந்து ஒரு மேட்ச் வின்னிங் பர்பாமன்ஸ்ஸை கொடுப்பார். இதன் காரணமாகவே அவரை நான் பெஸ்ட் பவுலர் என்று கூறுவதாக ரோகித் சர்மா வெளிப்படையாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement