என்ன செலக்ட் பண்றீங்கனா முன்னாடியே சொல்லுங்க.. பி.சி.சி.ஐ மீட்டிங்கில் – ரோஹித் சர்மா அதிரடி

Rohit
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் அடுத்ததாக இந்திய அணி 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு அணியில் பல மாற்றங்களை செய்து தற்போது தரமான டி20 அணியை தயார்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்த டி20 அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இடம் வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர்கள் இருவரும் விளையாடுவார்களா? என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது. ஏனெனில் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் இதுவரை அவர்கள் இருவரும் எந்த ஒரு டி20 போட்டிகளும் விளையாடவில்லை.

- Advertisement -

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட அணியே களமிறங்கி விளையாடி வந்தது. அவர் காயம் சந்தித்த வேளையில் தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணி விளையாடி வருகிறது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பையை வழிநடத்தப்போவது யார்? விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடுவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இவ்வேளையில் தற்போது பிசிசிஐயுடன் நடைபெற்ற ஒரு மீட்டிங்கில் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா தன்னை டி20 உலக கோப்பை தொடரில் தேர்வு செய்கிறீர்களா? இல்லையா? என்பதை முன்கூட்டியே தெரிவித்து விடுங்கள். அப்பொழுதுதான் நான் அந்த தொடருக்காக தயாராக முடியும் என்று அதிரடியான கருத்தினை தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் டி20 உலகக் கோப்பை நடைபெற இருக்கும் வேளையில் அதற்கான தயாரிப்பு நேரம் குறைவாகவே உள்ளதால் முன்கூட்டியே தெரிவித்தால்தான் அதற்கு ஏற்றார் போல் திட்டங்களை வகுத்து தயாராக முடியும் என்பது போன்று ரோகித் சர்மா அந்த மீட்டிங்கில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 22 வருடம் கழித்து.. ஆர்வக்கோளாறில் முஸ்பிகர் ரஹீம் செய்த சம்பவம்.. மோசமான சாதனை படைத்த பரிதாபம்

அதே வேளையில் பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியான ஒரு தகவலின் படி ராகுல் டிராவிடும் டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் அதன் காரணமாக ரோகித் சர்மா நிச்சயம் விரைவில் இந்திய டி20 அணியில் இடம் பிடித்து கேப்டனாக அடுத்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை வழி நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. அதே வேளையில் டி20 அணியில் விராட் கோலி இடம் பெறுவாரா? மாட்டாரா? என்பது புரியாத புதிராகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement