22 வருடம் கழித்து.. ஆர்வக்கோளாறில் முஸ்பிகர் ரஹீம் செய்த சம்பவம்.. மோசமான சாதனை படைத்த பரிதாபம்

Rahim Obstructing Field
- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் வென்ற வங்கதேசம் டிசம்பர் 6ஆம் தேதி தலைநகர் தாக்காவில் நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஜாஹிர் ஹசன் 24, ஜெய் 14 என துவக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதை தொடர்ந்து வந்த கேப்டன் நஜ்மல் சாந்தோ 9, மோனிமுல் ஹைக் 10 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தியதால் 47/4 என ஆரம்பத்திலேயே வங்கதேசம் தடுமாற்ற துவக்கத்தை பெற்றது.

- Advertisement -

பரிதாப சாதனை:
அந்த சூழ்நிலையில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் முஸ்பிகர் ரஹீம் சரிவை சரி செய்வதற்காக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த வகையில் 35 (83) ரன்கள் எடுத்து நன்கு செட்டிலான அவர் கெய்ல் ஜெமிசன் வீசிய 41வது ஓவரின் ஒரு பந்தை எதிர்கொண்ட நிதானமாக நிறுத்த முயற்சித்தார். அப்போது அந்த பந்து அவருடைய பேட்டில் பட்டு ஸ்டம்பை நோக்கி சென்றது.

அதை அப்படியே பின்னோக்கி சென்று கையில் தடுக்க முயற்சித்தும் அவரால் முடியவில்லை. அதே சமயம் பந்தும் ஸ்டம்பில் அடிக்காமல் சென்றது. அந்த சில நிமிடங்களில் மீண்டும் அதே போல எதிர்கொண்ட அவரது பேட்டில் பட்ட பந்து ஸ்டம்பை நோக்கி சென்றது. ஆனால் இம்முறை அவர் நேரடியாகவே கையை குறுக்கே வைத்து பந்தை தள்ளி விட்டு தடுத்ததால் உடனடியாக களத்தில் இருந்த நடுவரிடம் அவுட் கொடுக்குமாறு நியூசிலாந்து வீரர்கள் கோரிக்கை வைத்தனர்.

- Advertisement -

அதாவது பேட்டில் எட்ஜ் வாங்கி ஸ்டம்ப் மீது மோதுவதற்காக பந்து சென்றால் அதை பேட்ஸ்மேன்கள் கால்களால் தடுக்க உரிமை உள்ளதே தவிர கைகளால் தடுக்க கூடாது என்பது விதிமுறையாகும். ஆனால் அவுட்டாவதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக பந்தை தடுத்த ரஹீம் “அப்ஸ்ட்ரக்டிங் தி ஃபீல்ட்” விதிமுறையை மீறியதால் நடுவர்கள் அவுட் கொடுத்தார்கள். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை தடுத்ததற்காக அவுட்டான முதல் வங்கதேச வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக 8வது வீரர் என்ற பரிதாபமான சாதனையை முஷ்பிகர் ரஹீம் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: அந்த விஷயத்துல தோனியின் குவாலிட்டி அப்படியே ரோஹித் சர்மாவிடம் இருக்கு.. ஸ்ரீசாந்த் பாராட்டு

இதற்கு முன் 1951இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்தின் வில்லியம் என்டேன், 1979இல் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ ஹில்டிட்ச், 1982இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் மோசின் கான், 1983இல் இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ், 1993இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் கிரகாம் கூச், 2001இல் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக், 2001இல் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் மைக்கேல் வாகன் ஆகியோர் இதே முறையில் அவுட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement