அந்த விஷயத்துல தோனியின் குவாலிட்டி அப்படியே ரோஹித் சர்மாவிடம் இருக்கு.. ஸ்ரீசாந்த் பாராட்டு

Sreesanth 3
- Advertisement -

நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இன்று இந்தியாவின் முழு நேர கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறிய அவர் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி துவக்க வீரராக களமிறங்குவதற்கு கொடுத்த வாய்ப்பை பொன்னாக மாற்றி ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக அசத்தி வருகிறார்.

அதற்கிடையே ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்றதன் காரணமாக விராட் கோலிக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்ற அவருடைய தலைமையில் இருதரப்பு தொடர்களில் இந்தியா மிரட்டலான வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனாலும் 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஆகிய 4 பெரிய தொடர்களில் அவருடைய தலைமையில் இந்தியா தோல்விகளை சந்தித்தது.

- Advertisement -

ஸ்ரீசாந்த் பாராட்டு:
அதனால் விமர்சனங்களை சந்தித்துள்ள அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் துறைகளில் சில வீரர்கள் சுமாராக செயல்பட்டாலும் அதற்காக விமர்சிக்காமல் அவர்களுக்கு தொடர்ச்சியான ஆதரவையும் வாய்ப்பையும் கொடுப்பதில் தோனி போலவே ரோகித் சர்மாவும் செயல்பட்டு வருவதாக ஸ்ரீசாந்த் பாராட்டியுள்ளார்.

இது பற்றி சமீபத்தில் பெட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஸ்ட்ரீட் ஸ்மார்ட் கிரிக்கெட் வீரரான அவர் தோனியை போலவே உடனடியாக காட்சியை விட்டு வெளியேறுவதில்லை. குறிப்பாக பவுலிங் சிறப்பாக இல்லாவிட்டாலும் ஃபீல்டிங் அவ்வளவு சிறப்பாக இல்லாவிட்டாலும் அவர் மற்ற வீரர்களுக்கு ஆதரவளிப்பதை உறுதி செய்கிறார். அவர் ஃபீல்டர்களை ஆதரிக்கும் விதம் சிறந்த ட்ரெண்டாகும்”

- Advertisement -

“இந்த உலகக் கோப்பையில் விளையாடாத வீரர்களிடம் கூட அவர் நேரடியாக சென்று தேவையான ஆலோசனைகளை பெற்றார். கேப்டனாக இருந்தாலும் அவர் அனைத்து வீரர்களிடம் சகோதரர் மற்றும் நண்பராக நடந்து கொள்கிறார். அது மிகவும் முக்கியம். எனவே இது ஒரு நல்ல கேப்டன் கொண்டிருக்க வேண்டிய தகுதிகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: உலகக் கோப்பையை பறித்த ஆஸிக்கு.. அந்த 2 சீரிஸ்ல பதிலடி கொடுப்பேன்.. சுப்மன் கில் அதிரடி நம்பிக்கை

இந்த நிலையில் ஆஸ்திரேலிய டி20 தொடரில் ஓய்வெடுத்த ரோகித் சர்மா அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் ஓய்வெடுக்க உள்ளார். அதைத்தொடர்ந்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கூட டெஸ்ட் தொடரில் மட்டுமே மீண்டும் கேப்டனாக ரோகித் சர்மா களமிறங்க உள்ளார். அந்த வகையில் நிறைய குழப்பங்கள் காணப்பட்டாலும் குறைந்தபட்சம் 2024 டி20 உலகக் கோப்பை வரை அவர் இந்தியாவின் கேப்டனாக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement