வீடியோ : முகமது ஷமிக்கு எதிராக கோஷமிட்ட இந்திய ரசிகர்கள் – ரோஹித் கொடுத்த பதில் என்ன தெரியுமா?

Shami
Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது மார்ச் 9-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்றது. இந்த போட்டியின் கடைசி நாளான நேற்று இரண்டு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி போட்டி டிராவில் முடிவடைந்ததால் இந்திய அணி இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றி அசத்தியது.

IND vs AUS

இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆகியோர் நேரில் கலந்துகொண்டு போட்டியை கண்டு ரசித்தனர். அதேபோன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கான வாய்ப்பினை உறுதி செய்யும் முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்ட இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை பெற்றது.

- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டி இந்த போட்டி டிராவில் முடிவடைந்தாலும் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால் தற்போது இருநாட்டு அணிகளை சேர்ந்த ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் வெற்றிக்கு பிறகு மைதானத்தில் வளம் வந்த இந்திய வீரர்கள் மத்தியில் முகமது ஷமிக்கு எதிராக மட்டும் ரசிகர்கள் சிலர் மதரீதியான கோஷங்களை முழங்கி இருக்கிறார்கள். இது குறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் முகமது ஷமிக்கு எதிராக ஒரு சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்கி இருக்கிறார்கள். ஏனெனில் இஸ்லாமியர்களை வெறுக்கும் வகையில் சில மதவெறியர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் முகமது ஷமிக்கு எதிராகவும் ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷங்கள் முழங்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அணியின் தலைவர் ரோகித் சர்மா கலந்து கொண்ட போது முகமது ஷமியை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கு பதிலளித்த ரோஹித் : ஷமிக்கு எதிராக இப்படி கோஷமிட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இப்போதுதான் கேள்விப்படுகிறேன் அங்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : IND vs AUS : உண்மையா சொல்றேன். இந்தியாவில் இந்தவொரு விஷயம் ரொம்பவே கஷ்டம் தான் – நாதன் லயன் பேட்டி

ஆனாலும் ரோகித் சர்மாவின் இந்த பதிலை கேட்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு தெரிந்திருக்காவிட்டாலும் இப்படி ஷமிக்கு எதிராக கோஷங்கள் எடுக்கப்படும் போது அது ஏற்றிருக்கக் கூடியது அல்ல என்று அவர் உறுதியாக கூறியிருக்க வேண்டும். இதுபோன்ற விஷயங்களை அவர் சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது என ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement