IND vs AUS : உண்மையா சொல்றேன். இந்தியாவில் இந்தவொரு விஷயம் ரொம்பவே கஷ்டம் தான் – நாதன் லயன் பேட்டி

Lyon
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. கோலாகலமாக நடைபெற்று முடிந்த இந்த தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான வாய்ப்பினையும் உறுதி செய்தது. அதன்படி இந்த நான்காவது போட்டி டிராவில் முடிவடைந்தாலும் ஏற்கனவே முதல் மூன்று போட்டிகளில் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தால் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

IND vs AUS

- Advertisement -

அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் அணியாக தகுதி பெற்ற வேளையில் தற்போது இந்திய அணி இந்த தொடர் முடிந்த பிறகு இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முடிவின் அடிப்படையில் இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த தொடர் முழுவதுமே ஆஸ்திரேலியா அணி சிறப்பாக செயல்பட அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லையன் முக்கிய காரணமாக திகழ்ந்தார். இந்த தொடர் முழுவதுமே இந்திய பேட்ஸ்மன்களுக்கு எதிராக மிகவும் சவாலான வகையில் பந்துவீசிய அவர் ஏகப்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு எதிராக இந்திய மண்ணில் சில சாதனைகளையும் படைத்தார்.

Nathan Lyon

இந்த நான்காவது போட்டியின் முதல் இன்னிங்சில் கூட மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இப்படி தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்த தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நாதன் லயன் இந்த தொடர் முடிந்த பிறகு இந்தியாவில் இந்த தொடரில் விளையாடிய அனுபவத்தை போட்டிக்கு பின்னர் பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்திய மண்ணில் பந்து வீசுவது என்பது சாதாரண விடயம் கிடையாது. இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் சவாலான ஒன்று. ஒரு அணியாக இந்த தொடரில் நாங்கள் வெற்றியை தவறவிட்டோம். ஆனாலும் இந்தத் தொடர் முழுவதுமே இந்திய அணிக்கு எதிராக நாங்கள் போராடியது பெருமை அளிக்கிறது. முதல் மூன்று போட்டிகளில் விளையாடிய மைதானத்தை விட இந்த கடைசி போட்டியில் விளையாடிய மைதானம் மிகவும் சவாலாக இருந்தது. இந்த மைதானத்தில் நாங்கள் நினைத்தது போன்று பந்து திரும்பவில்லை. இருந்தாலும் கடைசி வரை போராடியதில் மகிழ்ச்சி.

இதையும் படிங்க : : IND vs AUS : எனக்கும் ரோஹித் பாய்க்கும் அவரோட பவுலிங் தான் கஷ்டமா இருந்துச்சி – சுப்மன் கில் வெளிப்படை

இந்திய அணியுடன் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடப் போகிறோம் என்பதை நினைத்து மகிழ்ச்சியாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இன்னும் இறுதிப் போட்டிக்கு நாட்கள் இருப்பதினால் அதற்குள் நாங்கள் தயாராகி விடுவோம் என்று நினைக்கிறேன். அதே போன்று இந்த சுற்றுப்பயணத்தில் டாப் முர்பி மற்றும் குன்னுமேன் ஆகியோர் அறிமுகமானதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நிச்சயம் இந்திய மண்ணில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர்கள் பந்து வீசியது நல்ல அனுபவத்தை அவர்களுக்கு தரும் என்று நாதன் லையன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement