IND vs AUS : எனக்கும் ரோஹித் பாய்க்கும் அவரோட பவுலிங் தான் கஷ்டமா இருந்துச்சி – சுப்மன் கில் வெளிப்படை

Shubman-Gill-and-Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரானது நேற்றுடன் நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த நான்காவது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்ததால் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்து தொடரை கைப்பற்றியது. கடந்த மார்ச் 9-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது உஸ்மான் கவஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரது சிறப்பான சதம் காரணமாக முதல் இன்னிங்சில் 480 ரன்களை குவித்தது.

IND vs AUS

- Advertisement -

பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோரது சதம் காரணமாக 571 ரன்களை குவித்தது. பின்னர் 91 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது ஐந்தாம் நாளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

அப்போது இரு அணி கேப்டன்களும் ஒரு மனதாக போட்டியை டிராவில் முடித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்ததால் போட்டி டிரா என்று அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலியும், தொடர் நாயகன்களாக அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் 235 பந்துகளை சந்தித்து 12 மற்றும் ஒரு சிக்சர் என 128 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார்.

Shubman Gill 1

கே.எல் ராகுலுக்கு பதிலாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பினை பெற்ற சுப்மன் கில் அந்த போட்டியில் சுமாராக செயல்பட்டாலும் இந்த நான்காவது போட்டியில் சதம் அடித்து மீண்டும் தனது இடத்தினை உறுதி செய்துள்ளார். இந்நிலையில் இந்த நான்காவது போட்டி முடிந்து இந்த போட்டியில் சந்தித்த சவால் குறித்து பேசியுள்ள சுப்மன் கில் கூறுகையில் :

- Advertisement -

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் அவருடைய சிறப்பான ஃபார்மில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் பேட்ஸ்மேன்களின் பொறுமையை மிகவும் சோதித்து பார்க்கிறார். அதோடு இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் மூன்றாவது நாளான அன்று நானும் ரோகித் சர்மாவும் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அவர் எங்களுக்கு எதிராக மிகவும் சவாலாக பந்து வீசினார்.

இதையும் படிங்க : IND vs AUS : ஆல் ஏரியாவிலும் கில்லியாக – 3 வகையான கிரிக்கெட்டிலும் யாரும் செய்யாத தனித்துவ உலக சாதனை படைத்த கிங் கோலி

பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் எளிதில் ரன்களை அடிக்க இடம் கொடுக்க மறுக்கிறார். அதோடு தொடர்ச்சியாக ஆஃப் ஸ்டம்ப் திசையில் பந்து வீசும் அவர் எங்களை கட்டுக்குள் வைப்பதற்காகவே மிக சிறப்பாக பந்துவீசுகிறார். அவரது பந்துவீச்சை எதிர்த்து விளையாடுவது சவாலாக இருந்ததாக சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement