- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஐ.பி.எல் தொடரில் எந்த டீமுக்காக விளையாடப்போறீங்க? ரசிகரின் கேள்விக்கு ரோஹித் சர்மா – கொடுத்த ரியாக்ஷன்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற முடிந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து டிரேடிங் செய்யப்பட்ட ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தினார். இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் அளித்தது.

எந்த அணிக்காக ரோஹித் சர்மா விளையாடப்போகிறார்? :

ஏனெனில் மும்பை அணிக்காக ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த சாம்பியன் கேப்டனான ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக இப்படி புதிய கேப்டனை நியமித்தது அனைவருக்குமே ஏமாற்றத்தை அளித்தது. இதன் காரணமாக மும்பை அணியில் உள்ள முன்னணி வீரர்களும் நிர்வாகத்தின் இந்த முடிவின் காரணமாக அதிருப்தி அடைந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறி அதில் கலந்து கொள்வார் என்று பலரும் பேசி வருகின்றனர். ஆனாலும் ரோகித் சர்மா இதுவரை எந்த ஒரு முடிவையும் அறிவிக்கவில்லை.

இருப்பினும் மும்பை அணி நிர்வாகத்தின் மீதுள்ள அதிருப்தி காரணமாக ரோகித் சர்மா வெளியேறுவார் என்றும் அப்படி வெளியேறி ஏலத்தில் பங்கேற்றால் குறைந்தது 20 கோடி ரூபாய் வரை செல்வார் என்றும் பலரும் பேசி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது பெங்களூரு மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ரோஹித் சர்மா நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேரம் முடிந்து ஓய்வறைக்கு திரும்பும் போது ரசிகர் ஒருவர் அவரை பார்த்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எந்த அணிக்கு விளையாடுவீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். இதனை கேட்ட ரோகித் சர்மா நீங்கள் எந்த அணிக்காக நான் விளையாட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? என்று திரும்பி அவரிடமே கேட்டார்.

இதையும் படிங்க : 107மீ சிக்ஸர்.. மைதானத்துக்கு வெளியே பறந்த சிக்ஸர்.. தலைமுறையில் ஒரு வீரர்.. பாராட்டிய சஞ்சய் மஞ்ரேக்கர்

உடனே அந்த ரசிகர் ஆர்.சி.பி அணிக்கு வாங்க ரோஹித் பாய்.. “ஐ லவ் யூ” என்று கூறினார். அதனை கேட்ட ரோஹித் சர்மா சிரித்தபடி உள்ளே சென்றுவிட்டார். ஏற்கனவே சில முன்னாள் பிரபலங்கள் ரோகித் சர்மா ஆர்.சி.பி-க்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறிவரும் வேளையில் தற்போது ஆர்சிபி ரசிகருக்கு ரோகித் சர்மா கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வீடியோவாகவும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -