சவால்ன்னா அந்த பையனுக்கு ரொம்ப புடிக்குது.. நிச்சயம் பெரிய ஆளா வருவான் – இளம்வீரரை வாழ்த்திய ரோஹித் சர்மா

Rohit-and-Team
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நேற்று மார்ச் 9-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் கடைசி போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இங்கிலாந்து அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவர்களை மண்ணை கவ்வ வைத்தது.

இந்திய அணி பெற்ற இந்த அசத்தலான வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் ரோகித் சர்மா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி கைப்பற்றி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

- Advertisement -

அதோடு கடந்த 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை தவறவிடாமல் இருக்கும் இந்திய அணி இம்முறையும் அந்த கௌரவத்தை காப்பாற்றிக் கொண்டது. இந்நிலையில் இந்த கடைசி டெஸ்ட் போட்டி முடிந்து வெற்றி குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இளம் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து பாராட்டி பேசியிருந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. தற்போது அவர் மிகச் சிறப்பான நிலையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இப்படி ஒரு திறமை வாய்ந்த வீரர் நிச்சயம் பெரிய வீரராக மாறும் வாய்ப்பு உள்ளது. பந்துவீச்சாளர்களுக்கு எதிராக முதல் பந்தில் இருந்தே அழுத்தத்தை கொடுத்து அதிரடியாக விளையாட நினைக்கிறார்.

- Advertisement -

அவரிடம் நிறைய பாசிட்டிவான எண்ணங்கள் உள்ளன. மேலும் அவருக்கு எதிராக சவால்கள் அதிகம் இருந்தாலும் அந்த சவால்களை அவர் விரும்பி எதிர்கொள்கிறார். அவருக்கு இந்த இங்கிலாந்து தொடர் மிகச் சிறப்பான தொடராக அமைந்தது என ரோகித் சர்மா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : எனக்கும் ரோஹித்துக்கும் அது வேலை கிடையாது.. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் நீக்கம் குறித்து – டிராவிட் பதில்

இங்கிலாந்து அணிக்கெதிரான இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 இரட்டை சதம் உட்பட 712 ரன்கள் குவித்து அசத்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தொடர்நாயகன் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement