3 விதமான கிரிக்கெட்லயும் பிரமாதமா ஆடுறாரு. அவரோட பவுலிங் நமக்கு பெரிய ப்ளஸ் – ரோஹித் புகழாரம்

rohith
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் அரையறுதி போட்டியோடு வெளியேறியதை அடுத்து இந்திய அணியின் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் தோனிக்கு பிறகு எந்த ஒரு கேப்டனும் ஐசிசி கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்கிற தொடர் பேச்சுகள் இருந்து வரும் வேளையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் இந்த டி20 உலககோப்பையை தவற விட்டதால் தற்போது அதிகப்படியான விமர்சனங்கள் இந்திய அணியின் மீது எழுந்துள்ளது.

Shardul Thakur 1

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற இருப்பதினால் இம்முறை எப்படியாவது ஐ.சி.சி கோப்பையை கைப்பற்றியிட வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே இந்திய அணி சரியான திட்டங்களை வகுத்து தற்போது அந்த வழியில் பயணித்து வருகிறது.

அதன்படி எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான 20 வீரர்களை தேர்வு செய்த இந்திய அணி நிர்வாகம் தற்போது அவர்களுக்கான தொடர் வாய்ப்புகளை கொடுத்து இந்திய அணியை பலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த வங்கதேச தொடர், இலங்கை தொடர் என அடுத்தடுத்த தொடர்களை கைப்பற்றிய இந்திய அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரிலும் இந்திய அணி முழு பலத்துடன் களமிறங்கி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Siraj 2

அதன்படி நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 349 ரன்களை குவித்த இந்திய அணி நியூசிலாந்து அணியை 337 ரன்களில் சுருட்டி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இளம்வீரர் சுப்மன் கில் பேட்டிங்கில் அசத்தலாக செயல்பட்டு இரட்டை சதம் அடித்த அதே வேளையில் பந்துவீச்சு துறையில் முகமது சிராஜ் மிகச் சிறப்பாக செயல்பட்டு 10 ஓவர்கள் வீசி 2 மெய்டன் உட்பட 46 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு குறித்து போட்டி முடிந்து பேட்டியளித்திருந்த கேப்டன் ரோஹித் சர்மா வெகுவாக புகழ்ந்து பேசி இருந்தார். அந்த வகையில் முகமது சிராஜ் குறித்து ரோஹித் சர்மா கூறியதாவது : தற்போதெல்லாம் சிராஜ் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த போட்டியில் மட்டுமல்ல டெஸ்ட் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, டி20 கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, ஒருநாள் போட்டிகளாக இருந்தாலும் சரி அவருடைய வளர்ச்சி என்னை பிரமிக்க வைக்கிறது.

இதையும் படிங்க : IND vs NZ : இஷான் கிஷனை பின்னுக்கு தள்ளி சுப்மன் கில்லுக்கு ஓப்பனர் சேன்ஸ் தர இதுதான் காரணம் – ரோஹித் வெளிப்படை

அணிக்கு என்ன தேவையோ அதை சரியான திட்டத்துடன் தெளிவாக செயல்படுத்தி வரும் சிராஜ் இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறார். அவரது பந்துவீச்சு நிச்சயம் இந்திய அணிக்கு பலமாகவே இருக்கிறது என ரோகித் சர்மா அவரை புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement